India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காலியாக உள்ள 2,553 அரசு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 1,021 அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், இதுபோல் மற்ற இடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும், மருத்துவர் சேவை ஆட்சேர்ப்பு மையத்தால் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரும்பும் இடத்தில் பணியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

T20 WCயில் நியூசிலாந்து அணி 5.2 ஓவரில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த உகாண்டா 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசி.,1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். இரு அணிகளுமே நடப்பு T20 WC தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன.

துவரை, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளின் விலை ஜூலை மாதத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக பருப்புகளின் விலையில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. எனினும், அவற்றின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், பருவமழை மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பருப்புகளின் விலை குறைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ., 115 ரன்கள் எடுத்த நிலையில், நேபாள் 114 ரன்கள் எடுத்து தோல்வியடைந்துள்ளது. கடைசிப் பந்தில் நேபாள் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், குல்சன் ஜா ரன் அவுட்டானார். இந்த தோல்வி மூலம் நேபாள் T20 WC தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாள் 9ஆக குறைக்கப்பட்டதற்கு மா.கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத் தொடர் நாள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும், ஏராளமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய நிலையில் இவ்வாறு குறைத்தது கவலை தரும் விஷயமென்றும், இதுகுறித்து அப்பாவுடன் பேசப்படும் அவர் கூறியுள்ளார்.

T20 WCயில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் உகாண்டா அணி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அந்த அணியில் கென்னத் வைஸ்வா மட்டும் இரட்டை இழக்க ரன்கள் (11) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்கவே அந்த அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் எடுத்து. முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த வாரம் உகாண்டா 39 ரன்கள் எடுத்ததே T20 WCல் எடுக்கப்பட்ட குறைவான ரன்னாக உள்ளது.

திருப்பத்தூரில் நேற்று பள்ளிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சுமார் 11 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பிடிபட்டது. மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். பின்னர் உரிய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அச்சிறுத்தை காட்டில் விடப்பட்டது. இந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரஷ்மிகா மந்தனாவின் சமூகவலைதள பக்கத்தில் ஒருவர், அனிமல் பட காட்சியில் உள்ள “ஆண்களை நம்புவதை விட பயங்கரமானது வேறு இல்லை” என்று கூறும் காட்சியை பகிர்ந்திருந்தார். இதற்கு அவர், “முட்டாள்களை நம்புவது பயங்கரமானது. ஆனால் ஆண்களில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களை நம்புவது மிகவும் முக்கியமானது” என பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிஹாருக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவரின் காலில் முதல்வர் நிதிஷ்குமார் விழுந்தார். இதை பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆட்சி அதிகாரத்துக்காக 13 கோடி பிஹார் மக்களின் கவுரவத்தை நிதிஷ்குமார் விற்று விட்டதாகவும், நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே (மோடி) காலில் விழுந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் கனடாவுடன் இன்று மோதுகிறது. இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளை வெற்றிகொண்டு 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. கனடா அணி 3 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்வியுடன் ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா?
Sorry, no posts matched your criteria.