News June 15, 2024

1,744 Ioniq 5 மாடல் கார்களை திரும்ப பெறுகிறது Hyundai

image

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Hyundai, அயோனிக் 5 என்ற மின்சார கார்களையும் விற்கிறது. இதில் பேட்டரி சார்ஜ் பிரிவில் சில பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் 2024 ஏப்ரல் 30ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 1,744 கார்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக Hyundai தெரிவித்துள்ளது. இக்காரின் எக்ஸ்-ஷோ ரூம் விலை ரூ.46.05 லட்சமாகும்.

News June 15, 2024

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: 13 பேர் கைது

image

நெல்லையில் நேற்று முன்தினம் பட்டியலின இளைஞருக்கும், மாற்று சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சிபிஎம் அலுவலகத்தில் வைத்து சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதி சங்க தலைவர் பந்தல் ராஜா உள்ளிட்ட 25 பேர் CPM அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், தற்போது பந்தல் ராஜா உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்துள்ளார்.

News June 15, 2024

வங்கிக் கணக்கில் ₹1000… செக் பண்ணுங்க!

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1000 திட்டத்தின் இந்த மாதத்திற்கான தவணை காலை 10 மணியளவில் பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் முதல் தற்போது வரை 9 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 10ஆவது தவணை இன்று வரவு வைக்கப்பட்டது. உங்கள் கணக்கில் ₹1000 வந்துவிட்டதா? செக் பண்ணுங்க.

News June 15, 2024

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் கில்? (3/3)

image

இரட்டை சதமடித்த இசான் கிஷன், அதிரடி வீரர் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ரஞ்சி போட்டியில் விளையாடாததால் ஓரங்கட்டப்பட்டனர். அந்த வரிசையில் கில்லும் சேருகிறாரோ என்ற எண்ணம் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இடையே அரசியல் காணப்படுவதால் பலர் பயிற்சியாளர் பதவியை ஏற்க தயங்குவதாக கூறப்படும் நிலையில், இதுபோல முன்னணி வீரர்கள் ஓரங்கட்டப்படுவது அதை உறுதிபடுத்துவதாக உள்ளது.

News June 15, 2024

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் கில்? (2/3)

image

கிரிக்கெட் விளையாட அமெரிக்கா சென்ற கில், இந்திய அணியுடன் இல்லாமல் வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற ஒழுக்கக்கேடு காரணமாகவே அணியிலிருந்து நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. அணியுடன் கருத்து வேறுபாடு நிலவுவதை உறுதி செய்வதுபோல, இன்ஸ்டாகிராமில் கேப்டன் ரோஹித்தை கில் அன்பாலோ செய்துள்ளார். இதுவும் கிரிக்கெட் வட்டாரங்களில் பல யூகங்களை கிளப்பியுள்ளது.

News June 15, 2024

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் கில்? (1/3)

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்ட போதிலும், அவருக்கு அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. கனடாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரிங்கு சிங் சேர்க்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறந்த ஆட்டக்காரரான கில்லுக்கு ஏன் இந்த நிலை எனப் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

News June 15, 2024

யூரோ கோப்பை: ஜெர்மன் அணி அபார வெற்றி

image

ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான யூரோ கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜெர்மன் அணிகள் மோதின. அதில் ஸ்காட்லாந்தை 5 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மன் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. அந்த அணியின் வீரர்கள் 5 பேர் தலா ஒரு கோல் அடித்த நிலையில், ஸ்காட்லாந்து அணி ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.

News June 15, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹440 உயர்வு

image

கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்த வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 உயர்ந்து, ₹53,640க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹55 அதிகரித்து ₹6,705க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து, ₹95.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News June 15, 2024

இன்றும், நாளையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளைச் சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு விடுமுறை தினமான, ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய தினங்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டது. அன்றைய நாளில் பணியாளர்கள் வேலை செய்ததற்கு ஈடாக இன்று (ஜூன் 15) மற்றும் ஜூன் 22 ஆகிய இரு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது.

News June 15, 2024

சென்ட்ரல் வங்கிக்கு RBI ₹1.5 கோடி அபராதம்

image

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி, ₹1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. அதன் 2022ம் நிதியாண்டிற்கான கணக்குகளை ஆய்வு செய்ததில், மின்னணு பணப்பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்காதது, கடன்கள் மற்றும் முன்தொகை தொடர்பான உத்தரவுகளை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்ட ரிசர்வ் வங்கி, தற்போது அந்த வங்கிக்கு அபராதம் விதித்துள்ளது.

error: Content is protected !!