India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விதார்த், ஸ்வேதா டோரத்தி உள்ளிட்டோர் நடித்துள்ள புதிய படம் லாந்தர். இப்படத்தில் விதார்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்துக்கு எம்.எஸ். பிரவீன் இசையமைத்துள்ளார். எம். சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் சாஜி சலீம் இயக்கியுள்ளார். இவர் திரைத்துறைக்கு வரும் முன்பு ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இந்தத் தகவலை அவரே பகிர்ந்துள்ளார்.

கோவையில் இன்று மாலை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் கோவை சென்றடைந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியை தேடி தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று நடைபெறுகிறது. இதற்காக கோவை கொடிசியாவில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிஹாரின் பல மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தேர்வுக்குப் பின் வினாத்தாள்கள் எரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டில் மாநிலங்களுக்கிடையே செயல்படும் மோசடிக் கும்பல் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பாக 4 மாணவர்கள் உள்பட 13 பேரை செய்துள்ளதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் நடந்து வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் KN நேரு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், லால்குடி எம்எல்ஏ செளந்தரபாண்டியன், தான் இயற்கை எய்திவிட்டதாகவும், தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதாகவும் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு MLAவாக இருந்தும் தன்னை புறக்கணிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பொருள்கள் MRP விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் தொலைபேசி மூலம் புகார் அளிக்க வசதி இருப்பது போல ஆன்லைன் மூலம் புகார் அளிக்க வசதி உள்ளது. <

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற விசைப்படகு மூழ்கி 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே படகு மூழ்கி இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடலில் மூழ்கிய மேலும் 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரை கடலோரக் காவல்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மத்திய வர்த்தகச் செயலாளர் சுனில் பார்த்வால் டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது அவர், கடந்த மே மாதம் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 9.1% அதிகரித்து, ₹3.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இறக்குமதி 7.7% உயர்ந்து ₹5.18 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 7 மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ₹1.98 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். என்டிஏ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் போட்டியிடுவார் என அண்ணாமலை நேற்று கூறிய நிலையில், இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகள் மதுபோதை அல்லது பிற போதையில் உள்ளனரா? என காவல்துறையினர் பரிசோதிப்பதுண்டு. இந்த சோதனையில் சந்தேகம் ஏற்பட்டால், ரத்த பரிசோதனை நடத்தப்படும். இதில் 100 மில்லி ரத்தத்தில் 30 மில்லி கிராம் மது இருப்பது தெரிய வந்தால், வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியும். இதற்கு 1988 மோட்டார் வாகன சட்டம் 185ஆவது பிரிவின் 202ஆவது உட்பிரிவு வகை செய்கிறது.

உணவுப் பொருள்களின் விலை உயர்வால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவு 2.61% ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு பெரும்பகுதி மைனஸ் நிலையில் இருந்த மொத்த விலை பணவீக்கம், கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், குறிப்பிட்ட சில தயாரிப்பு பொருள்களின் விலை அதிகரித்ததே மொத்தவிலை பணவீக்க உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.