India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்கெட்டில், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் என்றாலே பூக்களின் விலை உயர்வது வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூவின் விலை 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதேபோல முல்லை, செவ்வந்தி, கனகாம்பரம், அரளி, கோழிக்கொண்டை ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடும் போது, நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் கட்சிகள் 22% அதிக தொகையை ரொக்கமாக செலவழித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டத்தில் ₹72,680 கோடி அளவுக்கு ரொக்கம் செலவிடப்பட்டதாக, கணக்கில் பதிவாகியிருந்தது. இது கடந்த தேர்தலில் ₹89,080 கோடியாக அதிகரித்துள்ளது. கட்சி விளம்பரங்களுக்காக அதிக தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கி உத்தரவிட கோரி, தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். ரவுடி பட்டியல் தயாரிப்பில் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஜிபிக்கு எதிராக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-ல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தம் உள்ள 170 பணியிடங்களுக்கு 25 – 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம்: <

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 700 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. இந்நிலையில், ரேஷன் அட்டையை ஒப்படைத்துவிட்டு, தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திராவில் தஞ்சமடைய உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

மலையாள நடிகர் சுரேஷ் கோபி, மத்திய அமைச்சராகியுள்ளார். இதையடுத்து மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கருணாகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திரா காந்தியை இந்தியாவின் தாய் என்றும், கருணாகரன் மற்றும் இடதுசாரி மூத்த தலைவர் ஈ.கே. நாயனாரை தமது அரசியல் குரு என்றும் புகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து பின்னடைவைச் சந்தித்த நிலையில், மாம்பழச் சின்னம் பறிபோய் விட்டதால், இடைத் தேர்தலில் அந்த சின்னத்தில் பாமகவால் போட்டியிட முடியாது. எனவே தேர்தல் ஆணையத்திடம் வேறு புதிய சின்னத்தை பெற்றே இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலை பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் மொத்தம் 5,54,598 வாக்குகள் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘The Quint’ இணைய ஊடகம் நடத்திய ஆய்வில், பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதே போல, 176 தொகுதிகளில், பதிவான வாக்குகளைவிட 35,093 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் UPI மூலம் பணம் செலுத்தும் வழக்கத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல், நூதன முறையில் 47% இந்தியர்களிடம் கைவரிசை காட்டியுள்ளது. UPI லிங்கை அனுப்பி அதை திறக்கும்படியோ, ஸ்கேன் செய்யும்படியோ அறிவுறுத்தும் இக்கும்பல், அதை நம்பி மக்கள் OTP அல்லது PIN விவரங்களைக் கொடுத்ததும், UPI மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை திருடியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சமூக செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம் என்றும், அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தேசம் அருந்ததி ராயின் பக்கம் நிற்கும் என்றும் சூளுரைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.