India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக 2.1 மீ. முதல் 2.3 மீ. உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுலா செல்வோர் கடலில் இறங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே குறிக்கோள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து பேசிய அவர், தேர்தலை கண்டு அஞ்சுகிற கட்சியல்ல அதிமுக என விளக்கமளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக நடைபெறுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ஏற்கெனவே, திமுக ஆட்சியில் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதோடு, அத்தொகுதியில் பாமகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், இருகட்சிகளும் ஆதிக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் ஒரு சரிவை எதிர்கொள்ள வேண்டாம் என்று அதிமுக யோசித்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக, நாதக, பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், இபிஎஸ்ஸின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மோடி அரசு, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக மாறியிருப்பதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், NDA அரசு எத்தனை ஆண்டுகள் நீடிக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். 400 தொகுதிகளில் வெற்றி, மோடி உத்தரவாதம் ஆகிய முழக்கங்கள் என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய அவர், 3 சக்கர ஆட்டோ போன்றது NDA அரசு என விமர்சித்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள, எழுத்தாளர் யூமா வாசுகிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழ் இலக்கியத்தில் தனி அடையாளத்துடன் யூமா வாசுகி பயணிப்பதாகக் கூறியுள்ளார். இதேபோல, யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வான லோகேஷ் ரகுராமனை, நம்பிக்கைக்குரிய இளைஞர் என அவர் பாராட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். திமுக MLA புகழேந்தி உயிரிழந்ததால், அந்தத் தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிடும் திமுக, பாமக, நாதக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளராக யாரைத் தேர்வு செய்யலாம் என மூத்த நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை அண்மையில் திமுக மேலிடம் பறித்தது. இதற்கு தேர்தல் பணியில் போதிய ஆர்வம் காட்டாததும், சீனியர் அமைச்சருடனான கருத்து வேறுபாடுமே காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில் எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே கட்சி பதவி பறிக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து புகார் வந்தால் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுக்க TRAI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட TRAI, மோசடி அழைப்புகளை தவிர்க்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என தெரிவித்துள்ளது. மேலும், மோசடி அழைப்புகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை நிதி நிறுவனங்களுக்கு TRAI வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ செய்த அனைத்து தொகுதிகளிலும் INDIA கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக, தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். சரத் பவார், உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பிருத்விராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், வெற்றிக்கு உதவிய மோடிக்கு நன்றி கூற INDIA கூட்டணி கடமைப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.