India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் வழங்குவதை இன்று முதல் SBI வங்கி நிறுத்தியுள்ளது. Merchant Category Codes (MCC) 9399 மற்றும் 9311 கீழ் வரும் அரசாங்கம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு இது அமலாகியுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம், யாத்ரா எஸ்பிஐ உள்பட 22 வகையான கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் இனிமேல் வழங்கப்படாது என SBI வங்கி அறிவித்துள்ளது.

INDIA கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடித்தளமிட்டதாக, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய அவர், INDIA கூட்டணி இன்னும் வலிமை பெற வேண்டும் என்றார். INDIA கூட்டணியை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கும் ஆற்றல் ஸ்டாலினுக்கு இருப்பதாகவும், INDIA கூட்டணிக்குள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஸ்டாலின்தான் அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இன்று முதல் திங்கள்கிழமை வரை 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. குறிப்பாக, ஜூன் 17இல் பக்ரீத் பண்டிகைக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் திறந்து இருக்குமா? என்று மது பிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனையடுத்து, பள்ளி, கல்லூரி, வங்கி, அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே விடுமுறை, டாஸ்மாக் வழக்கம்போல் திறந்து இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை என நடிகர் வேலராமமூர்த்தி தெரிவித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்று என்பதை மறுக்க முடியாது எனக் கூறிய அவர், இறுதி வரை சீரியல் பரபரப்பாக சென்றதாக தெரிவித்துள்ளார். ஆனால், கடைசி வரை ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளாதது தனக்கு அவமானம் என்றார். மறைந்த மாரிமுத்துவின் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்திருந்தார்.

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள், அதிக கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 4இல் ஒருவர் இந்தியர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மாநில மாணவர்கள் அதிகளவில் படிப்பதாக அமெரிக்க பல்கலைக்கழக குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல், AI, பொறியியல் போன்ற துறைகளில் அதிகளவில் படிப்பதாக கூறப்படுகிறது.

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்ட ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட செபியிடம் அனுமதி கோரியுள்ளது. சுமார் ₹25,000 கோடி நிதி திரட்டும் வகையில், அந்நிறுவனம் 142,194,700 பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கு செபி அனுமதி அளித்தால், எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓக்கு பிறகு, இது நாட்டின் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும்.

உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில், ஆன்மிகப் பயணம் சென்ற 12 பக்தர்கள் உயிரிழந்ததை அறிந்து மன வேதனை அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 வழங்கவும் அவர், உத்தரவிட்டுள்ளார். இதேபோல, 12 பேர் உயிரிழந்ததற்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘மகாராஜா’ படத்தின் எமோஷனல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை என நடிகர் கவின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘மகாராஜா’ படத்தை புகழ்ந்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜய் சேதுபதி அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், படத்தைப் பார்த்த பின் தன் இதயம் கனமாக இருப்பதை போன்று உணர்வதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கன், அமெரிக்க அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் குர்பாஸ்(AFG), ஆரோன் ஜோன்ஸ்(USA), வார்னர்(AUS), ஜர்தான்(AFG), ஆன்ட்ரீஸ்(USA) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இதனால், அந்த வீரர்களை பாராட்டி வரும் ரசிகர்கள் கோலி, டி-காக், ஹெட் போன்ற முன்னணி வீரர்கள் ஜொலிக்கவில்லை என விமர்சித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.