India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாஜகவை நிராகரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்றும், கூட்டணியில் கடுகளவும் பிரச்னை இல்லாமல் பரப்புரை செய்தது INDIA கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கட்டிய தொகுதியில் பாஜக மண்ணை கவ்வியது என விமர்சித்த அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக நாளை எங்கு செல்லும் என்பது தெரியாது என்று சாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 240 தொகுதிகளில் மட்டும் பாஜக வென்றிருப்பது மோடியின் தோல்வி என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய அவர், பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வங்கி கணக்குகளை பாஜக முடக்கியதாகவும், டெல்லி, ஜார்கண்ட் முதல்வர்களை கைது செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் தனிநபர்கள் சிம் கார்டு பெற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒருவர் 9 சிம் கார்டுகளை பெறலாம். மோசடி செயலுக்கு சிம் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபோன் தொலைந்து போகும் பட்சத்தில், அவர்களது பெயரில் உள்ள சிம் கார்டுகளின் எண்ணிக்கையை தடுக்கும் வாய்ப்பையும் Dot வழங்கியுள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 10.20 பாகிஸ்தானி ரூபாய் குறைந்து, 258.16 பாகிஸ்தானி ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 2.33 பாகிஸ்தானி ரூபாய் குறைந்து, 267.89 பாகிஸ்தானி ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ₹77.62க்கும், டீசல் ₹80.55க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எட்டு முறை தமிழ்நாடு வந்து மோடி கட்டமைத்த பிம்பத்தை, ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ராகுல் தகர்த்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், ராகுல் காந்தியின் அன்பை என்றைக்கும் மறக்க முடியாது என்றார். மக்களவைத் தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், முறைகேடுகளை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு, அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம் (AISA) அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ஜூன் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கழுதைகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அவை சுமைகளை தாங்கி செல்ல அத்தியாவசிய விலங்காக அமைந்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1.72% அதிகரித்து 59 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், கழுதைகளின் எண்ணிக்கை வளர்ந்த அளவில், பொருளாதாரம் உயரவில்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என எண் கணித நிபுணர்கள் கூறுகின்றனர். பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 3 உள்ளவர்கள் மனதளவில் மிகவும் கூர்மையானவர்களாவும், கடினமான சூழ்நிலைகளை கூட தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்பவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கின்றனர். சுயமரியாதை கொண்ட இவர்கள், மற்றவர்களின் வேலையில் தலையிட மாட்டார்கள் என்கிறார்கள்.

நேரடியாக பாமகவை ஆதரிப்பதற்காகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார். இடைத்தேர்தல்களை புறக்கணித்து வந்த பாமக, தற்போது போட்டியிடுவதும், அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதும் அவர்களுக்கு இடையேயான புரிந்துணர்வை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது அதிமுக தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் என அவர் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா-கனடா இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. Lauderhill மைதானத்தில் இன்று 33ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் மைதானம் முழுவதும் ஈரப்பதமாக உள்ளது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.