News June 15, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – தடங்கல் ஏற்படும்
*ரிஷபம் – சுகமான நாள்
*மிதுனம் – மகிழ்ச்சி அதிகரிக்கும்
*கடகம் – ஆதரவு கிடைக்கும்
*சிம்மம் – உடல் சோர்வு ஏற்படும்
*கன்னி – உதவி செய்யும் நாள்
*துலாம் – வரவு அதிகரிக்கும்
*விருச்சிகம் – செயலில் தாமதம் உண்டாகும்
*தனுசு – நட்பு மேலோங்கும்
*மகரம் – செலவு அதிகரிக்கும் *கும்பம் – சிக்கல் உண்டாகும் *மீனம் – இன்பமான நாள்

News June 15, 2024

EMI முறையில் வீடு வாங்க விருப்பமா?

image

EMI முறையில் வீடு வாங்கும் விருப்பம் இருந்தால், 3/20/30/40 விதியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். *வீட்டின் மொத்த விலை உங்கள் ஆண்டு வருமானத்தின் 3 மடங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். *EMIஇன் கால அளவு 20 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்க வேண்டும். *மாத தவணை உங்கள் சம்பளத்தில் 30%ஐ தாண்ட கூடாது. *குறைந்தபட்சம் 40% தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும்.

News June 15, 2024

T20 WC தொடரிலிருந்து விலகினார் முஜீப்

image

T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான் விலகியுள்ளார். உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய முஜீப்புக்கு, வலது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மீதமுள்ள போட்டிகளில் முஜீப் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஹஸ்ரதுல்லா ஸஸாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

News June 15, 2024

சவுக்கு சங்கர் ஜாமின் மனு தள்ளுபடி

image

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் முதல்முறை ஜாமின் கோரிய வழக்கு அவரது தரப்பில் வாபஸ் பெற்ற நிலையில், தற்போது 2ஆவது முறையாக ஜாமின் கோரிய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News June 15, 2024

ஜூன் இறுதிக்குள் ₹2000

image

விவசாயிகளுக்கான உதவித்தொகை ₹2000 ஜூன் இறுதிக்குள் அல்லது ஜூலை முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. PM கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் 3 தவணையாக ₹6000 வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 17ஆவது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 17ஆவது தவணை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 15, 2024

தங்கச் சங்கிலி பரிசளித்த ஸ்டாலின்

image

தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலில் சதவிகித அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் மாவட்ட செயலாளருக்கு 6 பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதிக வாக்குகளைப் பெற்றுதந்த தஞ்சை(ம) மாவட்டக் கழகச் செயலாளர் துரை சந்திரசேகரனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 6 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

News June 15, 2024

100 மசாலாக்களில் பூச்சிக்கொல்லி கலப்பு

image

முன்னணி பிராண்டுகளின் சில மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்துமாறு, FSSAI உத்தரவிட்டுள்ளது. பல்வேறு புகார்களை தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு மசாலா பிராண்டுகளின் மாதிரிகளை சோதனை செய்தது. 4,000க்கும் மேற்பட்ட மசாலா மாதிரிகளில், 2,000 மாதிரிகளின் முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், அவற்றில், 100 மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

News June 15, 2024

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துபவரா நீங்கள்?

image

ஒருவர் உங்களுக்கு ஒரு தகவலை அனுப்பிவிட்டு, அதை டெலிட் செய்தாலும் அதற்கான தடயம் இருக்கும். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட தகவல்களை, மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி சிலர் படிக்கின்றனர். ஆனால், இது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், இதுபோன்ற செயலிகளால் ஏற்படும் நன்மையை விட தீமைகளே அதிகம் என கூறுகின்றனர். டெலிட் செய்த தகவலை ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே படிக்க முடியும்.

News June 15, 2024

முட்டை விலை குறைந்தது

image

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை கடந்த 2 நாள்களாக குறைந்து கொண்டே வருகிறது. இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசு குறைத்து ₹5.10ஆக நிர்ணயம் செய்துள்ளனர். தேவை குறைந்ததால் கடந்த மூன்று நாள்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் குறைந்துள்ளது. தேவையை பொருத்து வரும் நாள்களிலும் விலை உயருமா? குறையுமா? என்பது தெரியவரும்.

News June 15, 2024

இங்கிலாந்து-நமீபியா போட்டி டாஸ் போடுவதில் தாமதம்

image

T20 உலகக் கோப்பை தொடரின் 34ஆவது லீக் போட்டியில் இன்று, இங்கிலாந்து – நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், மழை காரணமாக நார்த் சவுண்ட் மைதானம் ஈரப்பதமாக உள்ளதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக இந்தியா-கனடா அணிகள் மோத இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இதேபோல, இங்கிலாந்து-நமீபியா போட்டியும் ரத்தாகுமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

error: Content is protected !!