News June 16, 2024

தேர்தல் முடிவில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை

image

சமூக செயற்பாட்டாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்குப் பதிந்ததை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “தேர்தலில் பாஜக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்குமுறையே ஆயுதம். அடக்குமுறையை எதிர்கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை. தேசம் அருந்ததி ராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 16, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 16, 2024

BHEL நிறுவனத்திற்கு ₹7,000 கோடிக்கு ஆர்டர் தந்த அதானி

image

BHEL நிறுவனத்திடமிருந்து ₹7,000 கோடி மதிப்பிலான மின் உற்பத்திக்கான உபகரணங்கள் & துணை பொருள்களை வாங்க அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது. அதானி குழுமத்தின் பவர் நிறுவனமானது, சத்தீஸ்கர் (ராய்ப்பூர்) & உ.பி.,யில் (மிர்சாபூர்) அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு தேவையான பொருள்களை BHEL நிறுவனம் தனது திருச்சி & ஹரித்வார் ஆலைகளிலிருந்து தயாரித்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 16, 2024

அரசியலில் ஒதுங்குவது தற்கொலைக்கு சமம்: ஷாநவாஸ்

image

திமுக – அதிமுக என்ற களத்தை சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்று விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் அதிமுக பாஜகவுக்கு வலு சேர்த்து அன்றும், பாமகவுக்கு வாய்ப்பளித்து இன்றும் களத்தை இழக்கிறது. அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 16, 2024

ஜெகனின் வீட்டு கட்டடம் இடிப்பு

image

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் நடைபாதை புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டுள்ளது. அவரது ஹைதராபாத் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாக மக்கள் புகார் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

News June 16, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 16, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது – திருமாவளவன்
*இயக்கத்தில் இருக்கும் 10,020 பழைய பேருந்துகள் அகற்றப்படும் – எஸ்.எஸ்.சிவசங்கர்
*உலகளவில் 4ஆவது பெரிய சந்தையாக மும்பை பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது.
*காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு
*டி20 உலகக் கோப்பை: இந்தியா – கனடா ஆட்டம் மழை காரணமாக ரத்தானது

News June 16, 2024

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஸ்ரீசாந்த்

image

ரோஹித் ஷர்மா – விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர், “ஹர்திக் பாண்ட்யா & ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடலாம். சேசிங் செய்யும்போது போட்டியை பினிஷிங் செய்ய நம்மிடம் சேஸ் மாஸ்டர் கோலி இருக்கிறார். ஷிவம் துபே பந்து வீசவில்லையெனில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

மைனாரிட்டி பாஜக, காரணம் திமுக: ஸ்டாலின்

image

மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததற்கு காரணம் திமுக தான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த விழாவில் பேசிய அவர், பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி என்றார். மேலும், தமிழகத்தில் 39 இடங்களிலும் திமுக வென்றதால் தான் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

ஆழ்ந்த தூக்கத்துக்கு இதை குடியுங்கள்!

image

உடலையும் மனதையும் சீர்படுத்தும் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுபவரா நீங்கள்? இனி கவலையே வேண்டாம். ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த உதவும் மெலெட்டினின் ஹார்மோனை சுரக்க வைக்கும் பண்புகள் நிறைந்த மாமருந்து திப்பிலி பால். திப்பிலி வேரை பொடியை மிதமான சூட்டில் பாலுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்தால் திப்பிலி பால் தயார். இதனை படுப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு குடியுங்கள் போதும் சரியான நேரத்தில் தூக்கம் வரும்.

error: Content is protected !!