India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால், அந்தப் படத்தின் 2ஆவது பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் படம், ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிலுவையில் இருப்பதாலும், சில காட்சிகளை மீண்டும் படமெடுக்க இயக்குநர் முடிவு செய்திருப்பதாலும் ரிலீஸ், தீபாவளிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மெழுவர்த்தி தன்னைத் தானே கரைத்து கொண்டு, சுற்றிலும் வெளிச்சம் தரும். அதுபோல தந்தையானவர், தனது நலன் பாராது, பிள்ளைகள் வாழ்க்கைத் தரம் உயர மழை வெயில், இரவு பகல் என்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்து தங்களைத் தாங்களே உருக்குவதை பார்த்திருப்போம். அத்தகைய தந்தையரை கவுரவிக்க ஜுன் 16இல் உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று அத்தினம் கடைபிடிக்கப்படுவதால், அவர்களை கவுரவிப்போம்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விவரம் இதோ:-
*தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்துக்கு எதிராக (2009) *நியூசிலாந்து – பாகிஸ்தானுக்கு எதிராக (2010) *இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (2012) *இந்தியா – வங்கதேசத்துக்கு எதிராக (2016) *ஜிம்பாப்வே – பாகிஸ்தானுக்கு எதிராக (2022) *தென்னாப்பிரிக்கா – நேபாளத்துக்கு எதிராக (2024)

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரியில் 2.1 மீ, ராமநாதபுரம் 2.3 மீ, தூத்துக்குடி, நெல்லையில் 2.2 மீ உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் கடற்கரை செல்லும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, ‘டிஜிட்டல் இந்தியா மசோதாவை’ அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் ‘Deepfake’ புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 35ஆவது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. AUS அணி ஏற்கெனவே தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்காட்லாந்து 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று +2.164 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில், ஸ்காட்லாந்து அணி வென்றால், ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SBI அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததால், கடனுக்கான தவணைத் தொகை அதிகரிக்கும். ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள், லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வங்கியும் MCLR விகிதத்தை மாற்றி அமைக்கின்றன. இந்த விகிதத்தை பொறுத்தே வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் அரணாக 40 எம்.பி.,க்கள் இருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த விழாவில் பேசிய அவர், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி அரசு மீதுள்ள திருப்தியால் கிடைத்த வெற்றி என்றார். மேலும், திமுக கூட்டணி பெற்றது சாதாரண வெற்றியல்ல, வரலாற்று வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிகமுறை (2) ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற இந்திய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. முன்னதாக, 2009
ஆம் ஆண்டில், நடந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததற்கு காரணம் திமுக தான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த விழாவில் பேசிய அவர், பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி என்றார். மேலும், தமிழகத்தில் 39 இடங்களிலும் திமுக வென்றதால் தான் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.