India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 22ஆம் தேதி ‘G.O.A.T’ படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அநேகமாக, அடுத்த பாடல் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அதில், ‘உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்’ என்று தெரிவித்துள்ளதால், என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். வாக்காளர்களை பட்டியில் அடைப்பது போல் அடைத்து திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறிய அவர், தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவை காணவில்லை என போஸ்டர் அடித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். கேசிஆர் தனது சொந்த தொகுதியான கஜ்வெல் சட்டமன்ற தொகுதிக்கு வரவில்லை எனவும், மக்களால் அணுக முடியாத நிலையில் இருக்கிறார் எனவும் பாஜகவினர் கூறுகின்றனர். அவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் வாழும் லிவ்-இன் நடைமுறை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து குடும்ப வன்முறைச் சட்டம் 2005இல் தனி ஷரத்து உள்ளது. அதில், இளைஞரும், இளம்பெண்ணும் திருமணம் செய்யாமல் சுயவிருப்பத்துடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழலாம். அது சட்டவிரோதம் இல்லை. அதேபோல், 2 பேருக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோரின் சொத்துகளில் முழு உரிமை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த 3 முறை வாய்ப்பு கிடைத்தும் அதை சீர்குலைத்தது திமுக என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர் என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகாவது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு & காஷ்மீரில் கடந்த 9ஆம் தேதி முதல் தொடர் தீவிரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று விரிவான ஆலோசனைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ தளபதி, உளவுத்துறை இயக்குநர், ஜம்மு & காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டி, கொடி பிடிப்பவர்கள் ஒரு நாளும் கைவிடப்பட மாட்டார்கள் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். கட்சிக்குள் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் வந்தாலும், உழைப்பவர்களுக்கு மதிப்பளிக்கப்படும் எனக் கூறினார்.

மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படாததால், மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அந்த சின்னத்திலேயே போட்டியிட அக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னமாக புலி சின்னத்தை மீண்டும் கேட்க சீமான் முடிவு செய்துள்ளார். புலி சின்னம் தரவில்லையெனில் விவசாயி சின்னத்தை கேட்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.

‘ஜவான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூனின் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு PAN இந்தியா அளவில் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில், இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அட்லீ ₹60 கோடி சம்பளம் கேட்பதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

திருச்சி லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன், அமைச்சர் கே.என்.நேரு தன்னை புறக்கணிப்பதாக நேற்றைய தினம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில், தான் இயற்கை எய்திவிட்டதாகவும், தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இவ்விவகாரம் பூதாகரமான நிலையில், அந்த சர்ச்சைப் பதிவை தற்போது அவர் நீக்கிவிட்டார்.
Sorry, no posts matched your criteria.