India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘SK23’ படத்தின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகிறது. பிசினஸ் கணக்குகளைச் சொல்லி, அக்ரிமென்ட்டில் போடப்பட்ட சம்பளத்தைக் குறைக்கும்படி, இருவரிடமும் தயாரிப்புத் தரப்பு கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. நெருக்கடியைப் புரிந்துகொண்ட இருவரும், சம்பளத்தைக் குறைத்ததோடு, செலவினைக் கட்டுப்படுத்த இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று உணவில் சிக்கன் இல்லாமல் இருக்காது. அதனால், சிக்கன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) 1 கிலோ விலை ₹127க்கு விற்பனையாகிறது. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக கடந்த வாரம் ₹119க்கு விற்பனையான நிலையில், 1 வாரத்தில் விலை ₹8 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் பல இடங்களில் 1 கிலோ ₹250-280 வரை விற்பனையாகிறது.
வெயிலில் ஏற்படும் அலர்ஜி போன்ற தோல் பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் சுரைக்காய்க்கு உண்டாம். கோடையில் அதிகமாக கிடைக்கும் சுரைக்காயில் மோர் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். தோல் சீவி எடுத்து நறுக்கிய சுரைக்காய், இஞ்சி, வெள்ளரி, கொத்தமல்லி, மிளகாய், பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் மோரை ஊற்றினால் சுவையான சுரைக்காய் மோர் சர்பத் ரெடி.
மர்மமான முறையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மரண வாக்குமூலம் தொடர்பான கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விகாரம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜை படக்குழு அணுகியுள்ளது. கதையில் வில்லனுக்கும் முக்கியத்துவம் இருந்தால் நடிப்பதாகக் கூறிய சத்யராஜ், இல்லையென்றால் அதை ஈடுசெய்கிற அளவுக்குச் சம்பளத்தை கொடுக்க வேண்டுமென கோரியதாக் கூறப்படுகிறது. தற்போது, அவருடன் லோகேஷ் தொடர்ந்து பேசிவருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதாக அதனை தயாரித்த AstraZeneca நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். “ஒருவேளை அப்படியான பக்க விளைவுகள் ஏதும் வருமேயானால், அது ஊசி செலுத்திய ஒரு மாதத்திற்குள் வந்திருக்க வேண்டும். நாம் அதனையெல்லாம் கடந்துவிட்டோம்” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தன் பாலின ஆதரவு பிரசாரத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு காவல்துறையை இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்னை காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் தன் பாலின ஆதரவுப் பதிவு இடம்பெற்றதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “தமிழின பண்பாட்டை சீரழிக்கும் இத்தகைய பிரசாரத்தை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
வெயிலின் உச்சமாக கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. இதன் தாக்கமாக, நேற்று 15 இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அடுத்த 25 நாட்களுக்கு கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நேற்றைய தினம் கரூர், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பத்தூர், திருத்தணி, தருமபுரி, மதுரை ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யில் இருந்து ‘நாஞ்சில் விஜயன்’ விலகியதாக அவரே அறிவித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது சீசனில் இருந்து ஏற்கெனவே வெங்கடேஷ் பட் உள்ளிட்டவர்கள் விலகி சன் டிவிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் தற்போது விலகுவதாக அறிவித்திருக்கும் நாஞ்சில் விஜயன், விஜய் டிவிக்கும் எனக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான மானியம், சார்ஜிங் மையம் இருக்கும் இடங்கள் உள்ளிட்ட விபரங்களை செல்ஃபோன் செயலி வழியே இனி அறியலாம். இந்தச் செயலியை தமிழக அரசு ஜூன் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. அதில், மத்திய – மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள், மானிய உதவி, வாகன டீலர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதில் கிடைக்கும். இந்திய அளவில், மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.