India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ளன. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதன்படி வருகிற 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு 27ஆம் தேதி கடைசி நாள். மனு மீது 28ஆம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது. மனுவை திரும்ப பெற 30ஆம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 19ல் தேர்தலும், ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது. அதாவது, அன்றுமுதல் தேர்தல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன. அன்று தொங்கி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் நாள் வரை தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது, 85 நாட்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்த 85 நாட்களும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2Newsஉடன் இணைந்திருங்கள்.
அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறது. அதனை நீக்கிவிட்டு புதிய அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து C Vigil செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அளித்துள்ள பேட்டியில், “27 செயலிகள், இணையதளங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. C Vigil மூலம் பொதுமக்கள் புகார் அளித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். KYC செயலி மூலம் வாக்குப்பதிவை அறிந்து கொள்ளலாம்” என்றார்.
நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் 6 தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதியும், குஜராத்தில் 5 தொகுதிகளுக்கு மே 7ம் தேதியும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. உ.பியில் 4 தொகுதிகளுக்கும், மே.வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும், பீகார், தெலுங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களில் தலா 1 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்குப் பதிவுக்கும் (ஏப்ரல் 19) வாக்கு எண்ணிக்கைக்கும் (ஜூன் 4) இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதால் முடிவுகளை தெரிந்துகொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் உள்ள படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், பொதுவெளியில் உள்ள தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டு வருகிறது.
ஆந்திரா, அருணாச்சல் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா மாநில சட்டசபைகளுக்கு மே மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 4 மாநில சட்டசபைகளுக்கும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஜூன் மாதம் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
*முதல்கட்ட தேர்தல் – ஏப்ரல் 19 – தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் (UT).
*2ஆம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 26 – 13 மாநிலங்கள்/ UT
*3ஆம் கட்ட தேர்தல் – மே 7 – 12 மாநிலங்கள்/ UT
*4ஆம் கட்ட தேர்தல் – மே 13 – 10 மாநிலங்கள்/ UT
*5ஆம் கட்ட தேர்தல் – மே 20 – 8 மாநிலங்கள்/ UT
*6ஆம் கட்ட தேர்தல் – மே 25 – 7 மாநிலங்கள்/ UT
*7ஆம் கட்ட தேர்தல் – ஜூன் 1 – 8 மாநிலங்கள்/ UT
4. பேரணி, ஊர்வலம், கூட்டத்தை நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். 5. 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. 6.அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள் அளிக்கக் கூடாது. 7. வழிபாட்டு இடங்கள், பதற்றமான இடங்கள் & தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட்டம் நடத்தக் கூடாது. 8. மதம், மொழி, இனம் சார்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது.
Sorry, no posts matched your criteria.