India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை, அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்ரீத் பண்டிகையையொட்டி, முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், சீமான், சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடையவுள்ளது. அவருக்கு பிறகு, கவுதம் காம்பீர் அப்பதவிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வாரத்தில் கவுதம் காம்பீர் தேர்வு செய்யப்பட்ட தகவலை கிரிக்கெட் வாரியம் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, நாதக கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணியில் விசிகவை இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விகடன் ஊடகத்திற்கு பேட்டி அளித்த விசிக தலைவர் திருமாவளவன், INDIA கூட்டணியில் உள்ள விசிக டார்கெட்டை எட்ட முடியாத சூழலில், இலக்கைப் பாதியில் விட்டுவிட்டு வேறு நிலைப்பாடு எடுக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 2 பேர், மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூமியின் மேற்பரப்பை விட, மையமானது சுமார் 40 ஆண்டுகள் மெதுவாக சுழல்வதை, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம் எனக் கூறுகின்றனர். முன்னதாக, 2010ஆம் ஆண்டு பூமியின் மையமானது மெதுவாக சுழல்வதாக முதல் ஆய்வு அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், 2026 தேர்தலில் அக்கட்சி 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அந்தத் தொகுதிகள் பட்டியலை தயாரித்து, அத்தொகுதிகளில் தங்கள் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் செல்வபெருந்தகை ஆலோசனைப்படி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

நடப்பு உலகக்கோப்பையில் விராட் கோலி 5 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அவரை விமர்சிக்க மறுத்துள்ள ஹர்பஜன் சிங், நியூயார்க் மைதானம் ஆடுவதற்கு கடினமானது என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற சூழலில், ஒருவரின் திறனை எடைபோட விரும்பவில்லை எனவும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு ₹6,000 வழங்கி வருகிறது. இதன் 17வது தவணை ₹2,000 நாளை மறுநாள் (ஜூன் 18) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், eKYC பூர்த்தி செய்யாதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pmkisan.gov.in இணையதளத்தின் மூலமாகவோ, அருகிலுள்ள CSC செண்டர் மூலமாகவோ eKYC பூர்த்தி செய்யலாம்.

ராஜமௌலி இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘யமதொங்கா’ படத்தில் நடித்த நினைவுகளை நடிகை மம்தா மோகன்தாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் 200க்கும் அதிகமானோர் இருந்ததாகவும், அப்போது கவர்ச்சி உடை அணிய சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சினிமா குறித்து கேள்விபட்டுத்தான் வந்தேன் என்ற போதிலும், சில தருணங்கள் இப்படி அமைந்துவிடுவதாகவும் கூறினார்.

தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தந்தையின் அன்பை போற்றும் சிறந்த தமிழ் திரைப்படங்களை காணலாம்.
*தவமாய் தவமிருந்து (2005)
*மகாநதி (1994)
*வாரணம் ஆயிரம் (2008)
*அபியும் நானும் (2008)
*பாபநாசம் (2015)
*தெய்வ திருமகள் (2011)
*அசுரன் (2019) *அப்பா (2016)
Sorry, no posts matched your criteria.