India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயிலில் உடலை குளுமையாக்குவதில் மாம்பழத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதில் இருக்கக்கூடிய ப்ரீபயோட்டிக் வயிற்றுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை கொடுக்கிறது. இது குடல்பகுதிக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. இதில் வைட்டமின்–சி நிறைந்திருப்பதால் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம் தோலை காக்கும். மாம்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயத்தை தவிர்த்து, அளவாக சாப்பிடுவது நலம்.
தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒருவேளை, கெஜ்ரிவால் வெளியில் வந்தால், நிச்சயம் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படும். அது தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்றும் டெல்லி, பஞ்சாப் போன்ற ஆம் ஆத்மி வலுவாக இருக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தரம்சாலா மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்கிறது. புள்ளிப் பட்டியலில் CSK 5ஆவது, PBKS 8ஆவது இடத்தில் உள்ளன.
ஊதிய உயர்வை மாத சம்பளத்துடன் சேர்த்து வரவு வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜனவரி முதல், மாத ஊதியம் ₹10,000 உடன், ₹2,500 உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், 2 தொகையும் தனித்தனியாக வரவு வைக்கப்படுவதாக குற்றம்சாட்டிய பகுதி நேர ஆசிரியர்கள், அதுவும் காலதாமதமாகவே கிடைப்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நேபாளம் வெளியிட்டுள்ள புதிய ₹100 நோட்டில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகள் இருப்பதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய எல்லை பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளின் வரைபடத்துடன் அந்நாடு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெய்சங்கர், “நேபாளத்தின் தன்னிச்சையான முடிவால், களத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” என்றார்.
KKR அணிக்கெதிரான லீக் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் MI அணி பிளே-ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. இனிமேல் விளையாடும் போட்டிகள் பெயரளவிலானவை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் & பும்ராவுக்கு ஓய்வளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருவரும் இடம்பிடித்திருப்பதால், அதற்கு தயாராக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
வட உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்றும் இயல்பை விட 2-4°C வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 41-43°C வரை அந்த பகுதிகளில் வெப்பம் பதிவாகும் என்றும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 39-40°C வரை வெயில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் செய்தியுடன் மாணவர்களின் தற்கொலை செய்தியும் வெளியாகிறது. உயிரை விட மதிப்பெண்களே முக்கியம் என்ற மாணவர்களின் நினைப்பே இத்தகைய செயலை செய்யத் தூண்டுகிறது. வாழ்க்கையின் வெற்றி மதிப்பெண்களை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதில்லை மாணவர்களே. அதனை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை எடுத்து சொல்வது அவசியம்.
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள் வெல்வதே கஷ்டம்” என்று கூறியிருக்கிறார். நாளுக்கு நாள் வரும் செய்திகள் இதனை உறுதிபடுத்துவதாகவும் சசிதரூர் கூறினார்.
டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறுவது, அவ்வளவு சுலபமல்ல என்று RCB அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். GT அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின் பேசிய அவர், “வெள்ளைப் பந்து போட்டியில். விளையாடும் போது நீங்கள் 110% பங்களிப்பை கொடுக்க வேண்டும். புதிய பந்தை வைத்து பயிற்சி செய்தது இன்று வெற்றிகரமாக செயல்பட உதவியது” என்றார்.
Sorry, no posts matched your criteria.