India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கி.,ல் உள்ள விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் கண்ட போட்டோஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த போட்டோவைப் பகிர்ந்து ஸ்டார் டென்னிஸ் பிளேயர் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார். இது கோலியின் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரம், அங்கு டெஸ்ட் தொடர் நடைபெற்று வருவதால், அதனைக் காண விராட் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
USA அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் அனுப்பி பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பிடமும் அக்கடிதத்தை அவர் கொடுத்தார். இதற்கு தகுதியான நீங்கள் நிச்சயம் விருதை வெல்வீர்கள் என்றும் அவர் US அதிபரிடம் கூறினார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ₹400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 83,356 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,446 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. நேற்று மாலை சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த சந்தை இன்று சற்று சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டெல்லி பிரீமியர் லீக் ஏலம் நேற்றைய முன்தினம் (ஜூலை 6) நடைபெற்றது. இதில், திக்வேஷ் ரதியை ₹38 லட்சத்துக்கு South Delhi Superstarz அணி வாங்கியுள்ளது. இது, அவர் IPL 2025 மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையைவிட அதிகமாகும். LSG அணியால் ₹30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர், கடந்த சீசனில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், திக்வேஷ் ரதிக்கு அடுத்தடுத்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இருட்டிலும் இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது இபிஎஸ்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, இருளை அகற்றி தமிழகத்தில் ஒளி வீசச் செய்வதே தன்னுடைய தீராத ஆசை என்ற இபிஎஸ்-ன் கருத்துக்கே இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் பிரசாரப் பயணத்தின்போது திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை நாடு கடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாக்., முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். விரிவான பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்றும், ஆனால் இதற்காக சரியான ஆதாரங்களை சமர்ப்பிப்பதும், எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க சாட்சியம் அளிக்க இந்தியாவில் இருந்து நபர்கள் வருவதும் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.