India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஏர் இந்தியா விமானங்களில் இந்து மீல்ஸ், முஸ்லிம் மீல்ஸ் என 2 வகையில் உணவுப் பட்டியல் வழங்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் MP குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான X பதிவில், “இந்து மீல்ஸ், முஸ்லிம் மீல்ஸ் என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா? விமானப் போக்குவரத்து அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பக்ரீத் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது, இஸ்லாமிய நண்பர்களின் அன்பு கலந்த பிரியாணிதான். பிரியாணி என்பது பிரியன் (அரிசி) என்ற பாரசீக வார்த்தையில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது. 1398இல் மங்கோலிய மன்னர் தைமூர், பிரியாணியை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. பிரியாணி இந்தியாவிற்குள் வந்தது குறித்து பல கதைகள் இருந்தாலும், மேற்கு ஆசியாவில் தோன்றியது என்பதை பலரும் ஒப்புக்கொள்கின்றனர்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் சாமி தொடர்ந்த வழக்கில் ₹35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க நீதிமன்றம் ஆணையிட்டும், வழங்கவில்லை. இதனால், இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதுக்கு பயந்து அவர் தலைமறைவாகியதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியா-அமெரிக்கா உறவு வலுப்பெறும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடனான சந்திப்பு குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், உலகளாவிய பிரச்னை, இருதரப்பு உறவு குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முக்கிய விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏழைகளின் ரதம் என்றழைக்கப்படும் ரயிலில், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இதற்காக, IRCTC தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 45 காசுகள் கொடுத்தால் இன்சூரன்ஸ் பாலிசி சேர்க்கப்பட்டுவிடும். பிறகு, ரயில் விபத்து நேர்ந்து பயணிகள் இறக்க நேரிட்டால் ₹10 லட்சமும், காயமடைந்தால் காயத்தின் நிலைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும். முன்னதாக, அந்த தொகையைப் பெற நாமினியை இணைத்திருக்க வேண்டும்.

2000ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஆனால், அவரது ராஜினாமா கடிதத்தை வாஜ்பாய் ஏற்கவில்லை.

1999ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கவுஹாத்தி அருகே, அவாத் அசாம் ரயிலும், பிரம்மபுத்ரா மெயிலும் ஒரே பாதையில் வந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிக்னல் இயக்குவதில் ஏற்பட்ட மனித தவறால் விபத்து நேர்ந்ததாக அறிக்கை வெளியானது. இதை தொடர்ந்து, விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலகினார்.

அரியலூரில் 1956ஆம் ஆண்டு ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. ஆற்று நீரில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் விழுந்ததில் 128 பேர் உயிரிழந்தனர். இந்த மோசமான விபத்துக்கு 82 நாள்களுக்கு முன்பு, ஹைதராபாத் அருகே பாலம் இடிந்து விழுந்ததில், 125 ரயில் பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

2017ஆம் ஆண்டு உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 156 பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து, கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் 100 பேர் காயம் அடைந்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளுக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்க பிரதமர் மோடி தயக்கம் காட்டினார்.

தாமதமாக வேலைக்கு வரும் மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர் நலத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ஒழுங்கீனமாக நடக்கும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், 2 நாள்கள் தாமதமாக வரும் ஊழியர்களின் கேஷுவல் விடுமுறையில் அரை நாளை குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மீது மக்கள் வைக்கும் முக்கிய புகார், உரிய நேரத்தில் வேலைக்கு வருவது இல்லை என்பது.
Sorry, no posts matched your criteria.