News May 6, 2024

நெல்லை-அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா ரயில் அறிமுகம்

image

நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயிலில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி, கயா, அயோத்திக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ₹18,550 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமின்

image

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு மருத்துவ காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி கொடுத்த ₹538.62 கோடியில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடத்திருப்பதாகக் கூறி ED அவரை கைது செய்திருந்தது. 75 வயதான அவர் புற்றுநோய் பாதிப்புடன் இருந்த நிலையில், தற்போது அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

இரவு உணவில் தயிரை சேர்க்கலாமா? கூடாதா?

image

தயிரானது பால் வகையைச் சேர்ந்த உணவுப் பொருளாகும். இதை இரவு நேரத்தில் சாப்பிடலாமா, கூடாதா என்பதில் பலருக்கு குழப்பம் உண்டு. வயிற்று பிரச்னை இருப்பவர்கள் இரவு உணவில் தயிரை சேர்த்தால் செரிமான கோளாறு உண்டாகும். இரவில் நம் உடலுக்கு பெரிதாக உழைப்பு இல்லாததால் உணவு ஜீரணம் ஆவதற்கு சிரமம் ஏற்படும். இதனாலேயே, இரவில் உணவுடன் தயிர் கலப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News May 6, 2024

பிரியமான தோழி தொடர் நிறைவடைந்தது

image

சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமான தோழி’ தொடர் முடிவுக்கு வந்தது. பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘பிரியமான தோழி’ தொடரில், பவித்ரா, சங்கவி, ஆதி கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் அதே நேரத்தில் (பகல் 1 மணி), ‘புன்னகைப் பூவே’ என்ற புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

News May 6, 2024

கோப்பையை வென்றால் பாக்., வீரர்களுக்கு பரிசு மழை

image

டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் வீரர்களுக்கான பரிசுத்தொகையை பாக்., கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கோப்பையை வென்றால் இந்திய மதிப்பில் தலா ரூ.83 லட்சத்தை ஒவ்வொரு வீரரும் பெறுவார்கள். பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில், வரும் ஜூன் 6-ஆம் தேதி அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த டி20 உலகக் கோப்பையில் அசத்திய பாகிஸ்தான், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது.

News May 6, 2024

முதல் நாளில் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ்

image

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல நாளை முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி இன்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 21,446 வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. <>இந்த<<>> இணையதளத்தில் இ-பாஸ் பெறலாம்.

News May 6, 2024

பொறியியல் படிப்பில் சேர 20,000 பேர் விண்ணப்பம்

image

பொறியியல் படிப்பில் சேர ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதையடுத்து, உயர்கல்விக்கு மாணவ- மாணவியர் விண்ணப்பிக்க ஏதுவாக இன்று காலை முதல் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 20,097 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

News May 6, 2024

வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவோர் கவனத்திற்கு

image

பாதுகாப்பு, கண்காணிப்புக்காக வீடுகளில் சிசிடிவி பொருத்துவது அதிகரித்து விட்டது. அதுபோல பொருத்துகையில், கீழ்காணும் யோசனையை பின்பற்றலாம். * சுழலும் சிசிடிவி பொருத்தினால், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும் *வைஃபை சிசிடிவி எனில், தொலைவில் இருந்தாலும் பார்க்கலாம் *அபாய ஒலி எழுப்பும் வசதியிருந்தால், யாரேனும் மர்ம நபர் நடமாடினால் ஒலி எழுப்பும் *பேசும் வசதியிருந்தால், உரையாட முடியும்.

News May 6, 2024

கார் விற்பனையில் மாருதி தொடர்ந்து நம்பர் 1 இடம்

image

இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதம் 1,37,952 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 0.46% அதிகம். ஆனால், மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14,766 குறைவு. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி 40.93% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2ஆவது இடத்தில் ஹூண்டாய், 3ஆவது இடத்தில் டாடா உள்ளது.

News May 6, 2024

கோலியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்

image

கோலியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளதாக பாக்., கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். கோலி சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை என்ற அவர், பாக்., வெற்றியை உறுதி செய்ய அவரை விரைவில் வீழ்த்த வேண்டும் என்றார். உலகக் கோப்பையில் பாக்., அணி இந்தியாவை ஜூன் 9இல் சந்திக்கிறது. பாக்., எதிராக 10 டி20 போட்டியில் ஆடியுள்ள கோலி, 488 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பையில் பாக்., எதிராக 82 ரன்கள் எடுத்தார்.

error: Content is protected !!