India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் ₹882 வழங்கப்படுவதில்லை. இதில் பாதி அளவிலான தொகை மட்டும் வழங்கப்படுவதால், நாளை முதல் போராட்டம் நடைபெறவுள்ளது.

சங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன்-2’. நீண்ட நாள்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது ஜூலை 12இல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

ஆண்ட்ராய்டு மொபைலுக்கான கூகுள் க்ரோம் செயலி, ‘Listen to this page’ என்ற புதிய வசதியை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்ட் டூ ஸ்பீச் (TTS) அம்சத்துடன் இணைக்கப்பட்ட இந்த வசதியை பயன்படுத்தி, வலைபக்கத்தை இனி படிக்க மட்டுமல்ல, கேட்கவும் செய்யலாம். பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான பல்வேறு குரல்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் ரோட்டா வைரஸ் தடுப்பூசி, குழந்தைகளுக்கு குடலிறக்கத்தை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக IIHMR MD ஜாக்கப் புலியெல் நடத்திய ஆய்வில், இந்த தடுப்பூசியை செலுத்திய குழந்தைகளுக்கு குடலிறக்க ஆபத்து 1.6 மடங்கு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனம், இந்த ஆய்வு முடிவை முற்றிலும் நிராகரித்துள்ளது.

தென்னிந்தியாவின் காங்., முகமாக ராகுலும், வட இந்தியாவின் காங்., முகமாக பிரியங்காவும் இருந்து வந்தனர். தற்போது, வயநாடு தொகுதியை ராகுல் ராஜினாமா செய்வதால், இந்த பிம்பம் தலைகீழாக மாறவுள்ளது. பிரியங்கா வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்து கம்யூ., வேட்பாளராக ஆனி ராஜா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வயநாடு களம் மீண்டும் சூடுபிடிக்கவுள்ளது.

வெஸ்ட் இண்டீசில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் இன்று நடைபெறும் T20 உலகக் கோப்பை போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள நியூசி., அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் PNG அணி பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200ஆவது ஆண்டு நிறைவையொட்டி உருவாக்கப்பட்ட நினைவு முத்திரை, நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழர்கள், 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை காடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது 200ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . அதற்கான நினைவு முத்திரையின் முதல் பிரதி ரஜினிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை, ரேஷன் கடைக்கு நேரில் வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உணவு வழங்கல் துறை எச்சரித்துள்ளது. அதேபோல, ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள், அதற்குண்டான அங்கீகார படிவத்தை (AC/TSO) நிரப்பி, குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கி பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது.

ஐஐடி குழுவால் உருவாக்கப்பட்ட PadhAI என்ற செயலி, நடந்து முடிந்த UPSC சிவில் சர்வீஸ் தேர்வை 7 நிமிடத்தில் எழுதி அசத்தியுள்ளது. AI அடிப்படையில் செயல்படும் இந்த செயலி, UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, சிவில் சர்விஸ் தேர்வுத் தாளுக்கு பதிலளித்து 200க்கு 170 மதிப்பெண் பெற்றுள்ளது. இது தேசிய அளவில் முதல் 10 இடங்களை பெறும் மதிப்பெண் ஆகும்.

T20 உலகக் கோப்பை போட்டியில் பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து இடையேயான போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் நியூசி, 1 வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம் PNG ஒரு வெற்றிகூட பெறவில்லை. இரு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.