India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. சற்று வித்தியாசமான கதையில் இருக்கும் என நடிகர் ராணா கூறியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர், கோர்ட், போலீஸ் பற்றிய பல கருத்துக்கள் நிறைந்த படமாக இது இருக்கும் என்றார். இப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் முடிவுக்குப் பின் உலக நாடுகள் இந்திய ஜனநாயகத்தை புதிய கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து வெளிநாடுகள் கூறும் கருத்துக்களுக்கு பதிலளித்த அவர், அந்நிய சக்திகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து மக்களவைத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர் என விமர்சித்தார். மேலும், அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடியும் எனக் கூறினார்.
இன்று (மே 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
SRHக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய மும்பை வீரர்கள் சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை அணிக்காக 4ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளனர். மேலும், ஐபிஎல்லில் 4ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இரண்டாவது ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் இவர் தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.ஜீவா இயக்கும் ‘லாக்டவுன்’ என்ற புதிய படத்தில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார் அனுபமா. இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டர் எப்படி இருக்கிறது?.
இன்று (மே 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* பொறியியல் படிப்பில் சேர ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
* சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவின் ஜாமின் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
* தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி
பல்வேறு காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். *போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல், நீர்ச்சத்து குறைவதால் *அதிக உடல்பருமன் *சிறுநீர்பாதை தொற்று *மிக அதிகமான புரத உணவுகள் *சோடியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகள் *நீண்டகாலம் நோய் வாய்ப்பட்டு இருப்பது *அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த இடங்களில் வசிப்பது *சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும், அதைத் தள்ளிப் போடுவது.
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால், அதை வளர்ப்போருக்கு ரூ.5,000 அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க இந்தியச் சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதலில் நாய் ஈடுபட்டால், அதை வளர்க்கும் நபருக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்க பாரதீய நியாய சங்கீத சட்டத்தின் 291ஆவது பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.