News June 18, 2024

டெபிட் கார்டு வைத்திருந்தால் இன்ஷூரன்ஸ் உண்டா?

image

வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் ஒவ்வொரு வங்கியும் பல்வேறு விதமான காப்பீடுகளை வழங்குகின்றன. கார்டின் வகைக்கு ஏற்ப (₹10 லட்சம் வரை) விமானப் பயண விபத்து காப்பீடு பெறலாம். அத்துடன், டெபிட் கார்டு வாயிலாக வாங்கப்படும் பொருள்கள் சேதமுற்றாலோ, தொலைந்து போனாலோ அதற்கும் காப்பீடு உண்டு. இதில், பல விதிமுறைகளும், வரையறைகளும் உள்ளன. உங்கள் வங்கி என்ன தருகிறது என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

News June 18, 2024

முஸ்லிம் & யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்

image

பிஹாரில் உள்ள முஸ்லிம் & யாதவர் சமூக மக்களின் கோரிக்கைகளை ஏற்கப் போவதில்லை என்று ஜேடியு எம்.பி., தேவேஷ் சந்திர தாக்கூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீதாமர்ஹியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “எனக்கு வாக்களிக்காத முஸ்லிம் & யாதவர் சமூகத்தினர் என்னுடன் தேநீர் அருந்தலாம்; ஆனால் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.

News June 18, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: ஒற்றாடல் ▶ குறள் எண்: 581
▶குறள்:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
▶பொருள்:
நேர்மையும் ஆற்றலும் கொண்ட ஒற்றரும், வழுவாத நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் இரு கண்களாகக் கருதி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

News June 18, 2024

அமித் ஷாவை சந்தித்த கவுதம் கம்பீர்

image

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இவரது தலைமைப் பண்பில் நாட்டின் பாதுகாப்பு கூடுதல் பலம் பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 18, 2024

போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல்

image

காசா மீதான போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அமைக்கப்பட்ட போர் கேபினட்டை இஸ்ரேல் அரசு கலைத்துள்ளது. இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ் & முன்னாள் ஜெனரல் ஈசன்கோட் ஆகியோர் கேபினட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை கலைக்கும் முடிவை நெதன்யாகு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் & ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 18, 2024

ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்ற பஜன் கவுர்

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று துருக்கியில் நடந்து வருகிறது. அதன் மகளிருக்கான ரிகர்வ் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பஜன் கவுர் (18), ஈரானின் மொபினா பல்லாவுடன் மோதினார். இலக்கை நோக்கி துல்லியமாக அம்புகளை எய்த பஜன் கவுர், 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அத்துடன் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றும் அசத்தியுள்ளார்.

News June 18, 2024

மென்பொருள் வல்லுநர்களின் தேவை குறையாது

image

செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தால் மென்பொருள் வல்லுநர்களின் தேவை குறைந்துவிடாது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார். AI தொழில்நுட்பம் நல்லது, கெட்டது இரண்டுக்கும் பயன்படக்கூடிய கருவியாக இருப்பதாகக் கூறிய அவர், கல்வி & சுகாதாரம் போன்ற துறைகளில் AI மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார். AI குறித்த அச்சம் தேவையில்லை என்ற அவரது கருத்து ஐ.டி., துறையினருக்கு ஆறுதலை அளித்துள்ளது.

News June 18, 2024

வயநாடு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த ராகுல்

image

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் அறிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ராகுல் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. கேரளாவை வாக்கு சேகரிக்கும் ஏடிஎம் இயந்திரமாக மட்டுமே காங்கிரஸ் பார்க்கிறது” என விமர்சித்துள்ளார்.

News June 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!