News June 18, 2024

ஆஃப்கானிஸ்தானுக்கு 219 ரன்கள் இலக்கு

image

டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 98 ரன்கள் எடுத்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் குல்பதீன், அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News June 18, 2024

வயநாட்டில் ராகுல் இடத்தை நிரப்புவேன்: பிரியங்கா

image

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், வயநாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும், ராகுல் அத்தொகுதி எம்பியாக இல்லை என்ற உணர்வு மக்களிடையே ஏற்படாத வகையில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், தானும் ராகுலும் வயநாடு மக்களுடன் இருப்போம் என்றார்.

News June 18, 2024

விவசாயிகள் வங்கிக் கணக்கில் ₹2000

image

PM கிஷான் திட்டத்தில் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் 3 தவணையாக ₹6000 வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 3ஆவது முறையாக பதவியேற்றதும், 17ஆவது தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2000 வரவு வைக்கப்பட உள்ளது.

News June 18, 2024

சிவ்ராஜ் சிங் செளஹான் எம்எல்ஏ பதவி ராஜினாமா

image

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான் புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் வென்று எம்எல்ஏ.வாக இருந்தார். அதே நேரத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விதிஷா தொகுதியில் வென்றதால், மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து புத்னி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

News June 18, 2024

ஒரே ஓவரில் 36 ரன்கள்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஃப்கான் – மே.இந்திய தீவுகள் இடையேயான லீக் போட்டி டேரன் சமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மே.இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்துவரும் நிலையில் 4ஆவது ஓவரில் 36 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. அஸ்மத்துல்லா வீசிய இந்த ஓவரில் நிக்கோலஸ் பூரன், 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசினார். அத்துடன், Extrasஇல் 6 ரன்கள் கிடைத்ததால், ஒரே ஓவரில் 36 ரன்கள் குவிக்கப்பட்டது.

News June 18, 2024

ரயில்வே மீது பாஜக அரசு அலட்சியம்: மம்தா பானர்ஜி

image

ரயில்வே துறை மீது பாஜக அரசு அலட்சியம் காட்டுவதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சராக தான் பதவி வகித்தபோது, ஏராளமான திட்டங்களை கொண்டு வந்ததாகவும், ஆனால் தற்போதைய பாஜக அரசோ ரயில்வே மீது எந்த அக்கறையும் காட்டுவதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். ராஜ்தானிக்கு பிறகு தூரந்தோ ரயில்தான் வேகமானது, அதன் நிலை தற்போது என்னானது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News June 18, 2024

கூடுதல் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்க முடிவு

image

தமிழகத்தில் மினி பஸ்கள் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. 1997ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து RTOக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

News June 18, 2024

சயனக் கோலத்தில் அருளும் ஈசன்

image

தமிழ்நாட்டிலேயே சயனக் கோலத்தில் ஈசன் காட்சி தரும் திருத்தலம் சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயிலில் மட்டுமே உள்ளது. ஆலகால விஷத்தை அருந்திய மயக்கத்தில் பார்வதி மடியில் ஈசன் தலைசாய்த்து, தேவர்களுக்கு அருள்பாலித்த இத்தலத்திற்கு, 14 பிரதோஷங்களுக்கு விரதமிருந்து சென்று, வில்வ மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, சிவப்பரிசி புட்டு படைத்து வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

News June 18, 2024

5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெல்வார்: காங்கிரஸ்

image

வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு ராகுலின் சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரமோத் திவாரி கூறியபோது, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல், சரியான அரசியல் முடிவு எடுத்திருப்பதாகப் பாராட்டினார். வயநாட்டில் பிரியங்கா 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

News June 18, 2024

சாலையில் கொட்டிய 25,000 முட்டைகள்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முட்டைகள் ஏற்றிவந்த லாரியும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான முட்டைகள் சாலையில் கொட்டி உடைந்தன. வெள்ளைக் கருவும், மஞ்சள் கருவும் சாலையில் ஆறாக ஓடின. இதனைக் கண்ட மக்கள், உடையாமல் இருந்த முட்டைகளை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!