India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை, இந்திய அணி நேற்று அறிமுகம் செய்தது. இன்று, அணியின் கேப்டன் ரோஹித், கோலி உள்ளிட்ட சக வீரர்கள் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இத்தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 10.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 10.12%, பிஹார் 10.03%, சத்தீஸ்கர் 13.24%, கோவா 12.35%, குஜராத் 9.87%, கர்நாடகா 9.45%, மத்திய பிரதேசம் 14.22%, மகாராஷ்டிரா 6.64%, உத்தரப் பிரதேசம் 11.63%, மேற்குவங்கம் 14.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை வில்லிவாக்கம் டான் பாஸ்கோ பள்ளி மாணவி பிரதிக்ஷா, +2 தேர்வில் 598 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். பொருளியல், வணிகம், கணக்குப்பதிவியல், வணிகம் கணிதம் ஆகிய 4 பாடங்களில் 100 மார்க் எடுத்துள்ளார். அதேபோல், திருப்பூரில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி மகாலெட்சுமி 598/600 மார்க் பெற்றுள்ளார். இதுவரை வெளியான மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தான் தமிழ்நாட்டின் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹைதராபாத் அணிக்கு, பெங்களூரு, சென்னை, மும்பை அணிகள் பதிலடி கொடுத்துள்ளன. அதிக முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்து மகத்தான வெற்றிகளை பதிவு செய்து வந்த SRH அணி, மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. MI, CSK, RCB அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய ஹைதரபாத் அணி, அதே அணிகளிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் ஐபிஎல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சுமார் 7,60,606 பேர் இத்தேர்வை எழுதிய நிலையில், அவர்களில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11,594 பேர் தேர்வெழுதவில்லை. இந்நிலையில், தேர்வெழுததாத மற்றும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை அரசு தேர்வுத் துறை இன்று வெளியிடுகிறது.
காட்டின் பேருயிரிகளான யானைகள் அதிக தூரம் நடக்கும் பழக்கம் கொண்டவை. ஆனால், அவற்றின் வழித்தடங்களில் குடியிருப்புகளை அமைக்கும் மனிதர்கள், அவற்றைத் தடுக்க மின்வேலிகளை அமைக்கின்றனர். சில நேரங்களில் யானைகள் இவற்றில் சிக்கி உயிரிழக்கின்றன. அதுபோல நேற்றும் கிருஷ்ணகிரி அருகே ‘மாக்னா’ யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்தது மனிதனின் குற்றமா? யானைகளின் குற்றமா?
கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.88.50க்கும், சவரன் ரூ.88,500க்கும் விற்பனையாகிறது.
SRH-க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து MI கேப்டன் ஹர்திக் கூறுகையில், ”சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தனர். நானும் சூழலுக்கு ஏற்றவாறு பந்து வீசினேன். அது சாதகமாக அமைந்தது. சூர்யகுமார் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர் MI அணியில் இருப்பதை அதிர்ஷ்டமாக கருத்துகிறோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
‘ராயன்’ படப்பிடிப்பை முடித்துள்ள தனுஷ், தற்போது ‘குபேரா’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பிச்சைக்காரனாக இருந்து கேங்ஸ்டராக மாறுவது போன்று கதைக்களம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அவர், தொடர்ந்து 10 மணி நேரம் குப்பைக் குழியில் இருந்தபடி நடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கனமழை அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வேலூரில் அதி கனமழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 8 மணி வரை) 12 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதேபோல், அணைக்கட்டில் 7 செ.மீ., தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 6 செ.மீ., குடியாத்தத்தில் 5.5 செ.மீ., ஒகேனக்கல்லில் 3.5 செ.மீ., ஆரூர் 3.1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.