News June 18, 2024

வேகமாக உணவு உட்கொள்ளும் வழக்கம் நல்லதா?

image

பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களினால் சிலர் உணவை வேகமாக சாப்பிடுவர். அப்படி சாப்பிடும் 642 ஆண்கள், 441 பெண்களின் உடல்நலனை ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இதில், வேகமாக உணவு உட்கொண்டோருக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமனடைதல், கெட்ட கொழுப்புச் சத்து அதிகரிப்பு பிரச்னை 11.6% கூடுதலாக இருப்பது தெரிய வந்தது. இதனால் உணவை மெதுவாக உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News June 18, 2024

அதிக நாள்கள் சபாநாயகர் பதவியில் இருந்தவர்கள் யார்?

image

மக்களவையின் அடுத்த சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிக ஆண்டுகள் சபாநாயகர் பதவி வகித்தவர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்ராம் ஜாகர் 2 முறை (1980 மற்றும் 1985) அந்த பொறுப்பில் இருந்துள்ளார். இவர் 9 ஆண்டுகள் 329 நாள்கள் சபாநாயகராகவும், அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸை சேர்ந்த எம்.ஏ.அய்யங்கார் 6 ஆண்டுகள் 29 நாள்கள் சபாநாயகராகவும் இருந்துள்ளனர்.

News June 18, 2024

அனுமதியில்லாத ஆம்னி பஸ்களில் முன்பதிவு வேண்டாம்

image

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் விபத்தில் சிக்கும்போது, உயிரிழப்பு, காயம் போன்றவை ஏற்பட்டால் காப்பீடு கோருவதில் சிக்கல் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி, 800 ஆம்னி பேருந்துகளுக்கு மாநில போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. மேலும் அனுமதியில்லாத பேருந்துகளில் பயணிக்க வேண்டாம், அத்துமீறி பயணிகள் பயணித்தால் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுவர் எனவும் எச்சரித்துள்ளது.

News June 18, 2024

கிரிக்கெட்டில் அதிகமுறை “டக் அவுட்”டான வீரர் தெரியுமா?

image

இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 1992-2011 வரை 495 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 59 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இதன்மூலம் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வால்ஸ் (54), இலங்கை முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா (53) ஆகியோர் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளனர்.

News June 18, 2024

கூகுளின் ஜெமினி AI இந்தியாவில் இன்று அறிமுகம்

image

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி AI இந்தியாவில் இன்று அறிமுகமாவதாக அந்நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இது தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன்களில் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் 1,500 பக்க ஆவணங்கள், 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரங்களை பெற முடியும்.

News June 18, 2024

வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்த ராகுல்

image

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து, அங்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

சபாநாயகர் தேர்தலில் காத்திருக்கும் சவால் (1/2)

image

தேர்தலுக்கு பிறகு, நாடாளுமன்றம் முதல்முறையாக 24ஆம் தேதி கூட இருக்கிறது. இதன் முதல் 2 நாள்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ளது. அந்தப் பதவிக்கான வேட்பாளரை, ஒருநாள் முன்னதாக 25ஆம் தேதி மோடி வெளியிடவுள்ளார். பொதுவாக, ஒருமித்த கருத்து அடிப்படையில் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவதே வழக்கமாகும்.

News June 18, 2024

சபாநாயகர் தேர்தலில் காத்திருக்கும் சவால் (2/2)

image

மக்களவையில் எதிர்க்கட்சிகள் இந்த முறை கூடுதல் உறுப்பினர்களுடன் வலுவான நிலையில் உள்ளன. அதனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. அவ்வாறு தரவில்லையெனில் சபாநாயகர் தேர்தலில் எதிர்த்து வேட்பாளரை நிறுத்த நேரிடும் எனவும் அக்கட்சிகள் எச்சரித்துள்ளன. எதிர்கட்சிகளின் இந்த சவாலை பாஜக, எவ்வாறு எதிர்கொள்ளும். விட்டு கொடுக்குமா? இல்லையா? என பொறுத்திருந்து காணலாம்.

News June 18, 2024

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா?

image

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை மீண்டும் தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் தேர்தல் குறித்து ஜூன் 22 அல்லது 23ம் தேதி கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியான நிலையில், பாஜக அதனை சரிக்கட்டவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 18, 2024

நீட் தேர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

image

நீட் தேர்வில் தவறு நடந்தால் ஒப்புக்கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீட் முறைகேடு புகார் தொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் விடுத்துள்ளது. மேலும், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தவறு இழைப்பது சமூகத்துக்கு ஆபத்து என்றும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!