India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை மாற்றியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் முக்கியமானப் போட்டித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை 7இல் நடைபெற இருந்த முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 14 நாட்களுக்கு முன்பே தேர்வர்கள் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதன்படி, எஸ்டிபிஐ கட்சிக்கு அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது, செந்தில் பாலாஜியின் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பலமுறை ஜாமின் கோரி மனு செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அங்கித் திவாரிக்கு கொடுக்கப்பட்ட ஜாமினை முன்வைத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோர வாய்ப்புள்ளது.
ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவான படத்தில் அவர் நடித்துள்ளார். அந்த படத்தின் அறிமுக விழாவில் தனுஷ் பேசுகையில், “இளையராஜா, ரஜினியின் வாழ்க்கை வரலாறு படங்களில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டேன். அதில் ஒன்று நடந்துள்ளது. இது மிகப்பெரிய கெளரவத்தை அளிக்கிறது. நான் இளையராஜாவின் பக்தன்” என்றார்.
பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் குறித்து பாஜக தலைவர்களுடன் கமலாலயத்தில் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், பாமக வருகையால் அது குறைந்துள்ளது. இதற்கிடையே, தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ₹1,229 கோடி வருவாய் ஈட்டியதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஏழைகளின் ரதம் என்று அழைக்கப்படும் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு செய்துவிட்டு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுகள் மூலம் ₹1,229 கோடி கிடைத்ததாக RTI-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, வட மாவட்ட தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சேலம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் எண்ணத்தில் பாமக உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில், பாஜக ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி கேட்கவும் பாமக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
CA மே 2024 தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ளது. அதன்படி, ▶இடைநிலை குரூப் I தேர்வுகள்- மே 3, 5, 9, ▶குரூப் 2 தேர்வுகள்- மே 11, 15, 17, ▶குரூப் 1 இறுதித் தேர்வுகள்- மே 2, 4, 8, ▶குரூப் 2 இறுதித் தேர்வுகள்- மே 10, 14 16, ▶சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள்- மே 14, 16 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விளம்பரங்களில் நடிக்க சமந்தா ரூ.2 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மயோசிடிஸ் நோய் பாதித்ததால் சிலமாதம் நடிக்காமல் இருந்த சமந்தா, சிகிச்சைக்கு பின், நோயில் இருந்து நலம் பெற்றதையடுத்து இந்தி படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அவர், படத்தில் நடிக்க ரூ.8 கோடியும், வெப் சீரிஸில் நடிக்க ரூ.12 கோடியும், விளம்பரங்களில் நடிக்க ரூ.5 கோடியும் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் தொகுதி பொறுப்பாளரே பதில் சொல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். வேட்பாளர்கள் அறிவிப்பை தொடர்ந்து நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களையே சாரும் என்று கூறினார். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.