India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புஷ்பா-2 படத்தில் நடிக்க மறுக்கவில்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். மகாராஜா படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் புஷ்பா-2 படத்தில் நடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, நான் நடிக்க மறுக்கவில்லை எனக் கூறிய விஜய் சேதுபதி, எப்போதும் நீங்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடாது. சில நேரங்களில் பொய் பேசுவது நல்லது என்றார். இதனால், அவர் நடிக்க மறுத்தாரா? இல்லையா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

மேகதாது அணை தொடர்பாக மத்திய இணையமைச்சர் சோமண்ணாவின் பேச்சுக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது திட்டத்தை அனுமதிக்க முடியாது என்ற அவர், அனைத்து மாநிலத்துக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, பேச்சுவார்த்தை மூலம் மேகதாது அணை கட்டப்படும் என சோமண்ணா கூறியிருந்தார்.

மத்திய இணை அமைச்சரின் கருத்துக்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் சோமண்ணா, தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், இது சாதாரணமாக கூறப்பட்டதாகவும், இதில் தவறில்லை என்றும் டி.கே.எஸ் கூறியுள்ளார்.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன், இன்று (ஜூன் 18) முதல் விளம்பரதாரர்கள்/ விளம்பர ஏஜென்சிகள் https://new.broadcastseva.gov.in மற்றும் https://presscouncil.nic.in ஆகிய இணையதளங்களில் தேவையான தகவல்களை சமர்பித்து சுய சான்றிதழ் பெற வேண்டும்.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரின் கணவர் ராபர்ட் வதேராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரியங்கா எம்பியாக எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே, அரசியலுக்கு வருவது குறித்து தான் முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார். ஆப்கன் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 சிக்சர்களை அடித்ததன் மூலம், கெயில் (124 சிக்சர்) சாதனையை பூரன் (128) முறியடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக எவின் லூயிஸ் (111), பொல்லார்ட் (99), ரோவ்மேன் பவல் (90) உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், 2024ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை உள்பட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பண்டைய கால தமிழர்களின் வாழ்க்கை முறை போன்ற வரலாறுகளை அறிந்துகொள்ளும் முயற்சியாக, தொல்லியல் துறை வல்லுநர்கள் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோதிட சாஸ்திரப்படி, தமிழில் அ, ஆ என ஆரம்பிக்கும் பொருள்கொண்ட ஆங்கில எழுத்தான A-வில் பெயர் தொடங்குவோரின் குணநலன்களைத் தெரிந்து கொள்வோம். *எந்த ஒரு விஷயத்தையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் *குறிக்கோளை அடைய உழைப்பார்கள் *தங்கள் திறமையை மற்றவர்கள் பாராட்ட நினைப்பார்கள் *அனைத்திலும் முன்னிலை வகிக்க நினைப்பார்கள் *மரியாதையை அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

அட்லீ, அல்லு அர்ஜூன் கூட்டணியில் தயாராக இருந்த புதிய படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கதை சொல்லி, அட்லீ ஓகே வாங்கி இருப்பதாக திரை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிகந்தர்’ படத்தில் சல்மான் பிஸியாக இருப்பதால், புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலை சந்திக்கின்ற திராணி அதிமுகவிற்கு இல்லை என்று சிபிஎம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என கூறிவிட்டு, தற்போது நிலைபாட்டை மாற்றியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், விழுப்புரம் மாவட்டம் இபிஎஸ் கட்டுப்பாட்டில் இல்லை என விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என கடந்த வாரம் இபிஎஸ் பேசியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.