India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, விரைவில் நலம் பெற வேண்டும் என ஆறுதல் தெரிவித்தார்.
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில், நாளை காலை இரண்டாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், தற்போது நண்பர்களுடன் பைக் ரைடு சென்றுள்ளார். படப்பிடிப்புக்கு நடுவே பிரேக் விடப்பட்டுள்ளதால், நடிகர் ஆரவ் உள்பட தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு பைக் ரைடுக்கு கிளம்பியுள்ளார். இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது நண்பர்களுடன் காட்டுக்குள் சமைத்து சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் தில்ஷான் மதுஷங்க் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது காயம் முழுமையாக குணமாகாததால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் குவேனா மபாகா (19) அணியில் இணைந்துள்ளார்.
பீகாரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மே.வங்க மாநிலம் சிலிகுரிக்கு ராணுவத் தளவாடங்களுடன் வீரர்களும் சென்று கொண்டிருந்தனர். அப்போது இன்ஜினுடன் இணைத்திருந்த பெட்டிகளில் சில தனியாக துண்டிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே விபத்து சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 20 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். ஏற்கெனவே, 21 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்ததோடு, மேலும் 20 பேரை கைது செய்துள்ளனர்.
நாதஸ்வரம், வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகபிரியா. இவர் அரவிந்த் சேகர் என்பவரை கடந்த 2002இல் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு அரவிந்த் மாரடைப்பால் மரணமடைந்தார். கணவர் மறைவிற்குப் பின் எந்த தொடரிலும் நடிக்காமல் மன உளைச்சலில் இருந்த ஸ்ருதி, தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் லட்சுமி தொடர் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
கேரளாவில் இருந்து இந்திய அணியில் இடம்பிடிப்பது சவாலான காரியம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியா கிரிக்கெட்டில் முதல் அணியாக உள்ளது. பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால், ஏதாவது ஸ்பெஷலான விஷயங்களை செய்தால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கிறது” என்றார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு, இதுவரை 16 ஒருநாள், 25 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளின் கணக்குகளை பராமரிக்க வரும் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான அரசின் நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.