India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிகம் கொதிக்க வைத்த ’டீ’யை பருகுவது, உடல் நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவிலுள்ள மனிதர்களின் அன்றாட வாழ்வில், ‘டீ’ என்பது இன்றியமையாத ஒரு புத்துணர்ச்சி பானம். இந்த நிலையில், மிதமாக கொதிக்க வைத்த டீயை பருகுவது நன்மை பயக்கும் எனக் கூறியுள்ள நிபுணர்கள், அளவுக்கு அதிகமாக சுட வைத்து குடிக்கும் ‘டீ’ ஸ்லோ பாய்சனுக்கு சமம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, வானொலி மூலம் மக்களுடன் உரையாற்றி வந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கவுள்ளார். அதன்படி, வரும் 30ஆம் தேதி முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகிறது. இந்நிலையில், எந்த தலைப்பில் பேசுவது என்பது குறித்து MyGov Open Forum, NaMo செயலி மற்றும் 1800 11 7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆங்கிலப் பள்ளிகள் மீதான பெற்றோர்களின் மோகம், தற்கொலைக்கு சமம் என தேசிய ஆராய்ச்சி கல்வி மற்றும் கவுன்சிலின் தலைவர் டி.பி.சக்லானி கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் பள்ளிகளில் பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் பணிபுரிவதாகவும், ஆங்கிலப் பள்ளிகள் மீதான மோகத்தால் பெற்றோர்கள் அங்குச் சென்று தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய வாழ்க்கை சூழலில் பலரும் தூக்கமின்மை பிரச்னையால் அவதி அடைகின்றனர். அவர்கள் நிம்மதியான தூக்கத்தை பெற மருத்துவர்கள் சில பரிந்துரைகளை வழங்குகின்றனர். அதன்படி, உறங்க செல்வதற்கு முன் சூடான நீரில் குளிக்கலாம். இது உடல் சூட்டை தணித்து தூக்கத்தை வரவழைக்கும் என்கிறார்கள். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகின்றனர். மாலை 6 மணிக்கு பிறகு மது, டீ, காஃபி குடிக்க கூடாது என கூறுகின்றனர்.

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தோல்வி காணாத இயக்கம் முழு இயக்கமாக வளர்ச்சி பெற முடியாது என்றார். அப்படியிருக்கும் போது, அதிமுகவுக்கு தோல்வி பயம் என்பது உச்சபட்ச உளறலாக பார்ப்பதாகவும், சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பது கட்சிகளின் ராஜதந்திரம் எனவும் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதி வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம். *ஆண்டு வருமானம் ₹1,20,000க்கு குறைவாக இருக்க வேண்டும். *கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று, குடும்ப அட்டை, ஆதாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து, காப்பீட்டு அட்டை பெறலாம். *குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் பயன் பெறமுடியும்.

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே, மழை பெய்யும்போது வாகன ஓட்டிகள் சாலையில் பார்த்து செல்லவும்.

தென்கொரியாவில் பெண்களை மோசமாக விமர்சிக்கும் நோக்கில் ‘Off limits to ajumma & only elegant women allowed’ என ஜிம் விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தென்கொரியாவில் அஜூம்மா என்ற வார்த்தை 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமான அல்லது நடுத்தர வயது பெண்களை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது, அழகான பெண்களுக்கு மட்டுமே ஜிம்மில் அனுமதி, Aunties-களுக்கு அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியானா எம்.எல்.ஏ கிரண் செளத்ரி காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் நாளை காலை பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகளான இவர், 4ஆவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வானவர். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், கிரண் செளத்ரியின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சென்னையில் நேற்று கார் மோதியதில், சூர்யா என்பவர் பலியானார். அது தொடர்பாக கைதான ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன், புனேவில் சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி இருவர் இறந்தபோதும், அவர் கைதாகி உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் சாமானியர்கள், பணக்காரர்கள் என சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கேள்வியை மக்கள் முன்வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.