News May 8, 2024

நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை

image

டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் அடிப்பது என்பது தற்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 20 முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிகபட்சமாகும். முன்னதாக கடந்த ஆண்டு 19 முறையும், 2022இல் 5 முறையும் அடிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இன்னும் 18 போட்டிகள் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News May 8, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
* சேப்பாக்கத்தில் நடைபெறும் CSKvsRR அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை மே 9ஆம் தேதி தொடங்குகிறது.
* டி20 கிரிக்கெட் தொடரில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய அணி வீரர் என்ற பெருமையை சாஹல் தன்வசமாக்கினார்
* இன்று முதல் வெப்பம் குறைய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

News May 8, 2024

சவுக்கு சங்கரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு

image

பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அண்மையில் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் சங்கரை அடித்து துன்புறுத்துவதாக அவரது வழக்கறிஞர் பேசியதையடுத்து, சவுக்கு சங்கரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மகனை அடித்து துன்புறுத்துவது தொடர்பாக நீதி விசாரணையை வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

News May 8, 2024

வசூலைக் குவிக்கும் ‘அரண்மனை 4’

image

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலைக் குவித்து வருகிறது. வெளியான 5 நாட்களில் சுமார் 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை என்பதாலும், போட்டிக்கு பெரிய படங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் இப்படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டீர்களா?

News May 8, 2024

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்கள் வேண்டாம்

image

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News May 8, 2024

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் லக்னோ

image

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றிகள் பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் SRH 4, LSG 6ஆவது இடங்களில் உள்ளன. இன்று LSG தோல்வியடையும் பட்சத்தில் அடுத்த 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் இன்றைய போட்டி LSGக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

News May 8, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 8, சித்திரை – 25 ▶கிழமை – புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை நேரம்: 10:30 AM – 12:00 AM ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶திதி: பிரதமை

News May 8, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி காலை 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் 30-40கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 8, 2024

கோடையில் ஏன் முட்டை சாப்பிட வேண்டும்?

image

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கண்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம், முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து காக்கும். முட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ, ஈ, துத்தநாகம் போன்றவை, சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இருப்பினும் முட்டையை அதிக அளவில் சாப்பிடக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News May 8, 2024

விவேகானந்தர் பொன்மொழிகள்

image

* எப்போதும் இனிமையும், புன்னகையும் கொண்டவனாக இரு. அதுவே உன்னைக் கடவுளின் அருகில் கொண்டு சேர்க்கும்.
*பிறருடைய பாராட்டு, பழிச்சொல் குறித்து சிந்திக்கத் தொடங்கினால் உன்னால் சாதிக்க முடியாது.
* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதை பின்தொடர்ந்திடு. கோழையாகவும், கபடதாரியாகவும் இருப்பது கூடாது.

error: Content is protected !!