News June 19, 2024

போக்சோ இணையதளம் தொடங்கிய அரசு

image

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ www.pocsoportal.tn.gov.in என்ற தளமும், கைம்பெண், ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் சேர்கைக்கான www.tnwidowwelfareboard.tn.gov.in ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. போக்சோ தளம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவது முதல் நீதிமன்ற தீர்ப்பு வரை அலுவலர்கள் கண்காணித்து வழக்கை விரைவுப்படுத்த உதவும்.

News June 19, 2024

புகைபிடிக்கும் பழக்கம் குறைகிறது

image

நாட்டில் புகைபிடிக்கும் பழக்கம் கணிசமாக குறைந்திருக்கிறது. NFHS தகவல்களின் அடிப்படையில் 2005ஆம் ஆண்டு 57% ஆண்கள் புகைபிடித்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு 38% ஆண்கள் மட்டுமே புகைக்கின்றனர். 2005ஆம் ஆண்டு 10.8% பெண்கள் புகைபிடித்த நிலையில் 2021ஆம் ஆண்டு அது 8.9%ஆக குறைந்துள்ளது. இது ஆரோக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

News June 19, 2024

அஜித் பவாரின் மனைவி போட்டியின்றி தேர்வு

image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 4 வருட பதவிக்காலம் உள்ள நிலையில், என்சிபியின் பிரபுல் படேல் ராஜினாமா செய்ததால், காலியான பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற அவர், தற்போது மாநிலங்களவை எம்.பி ஆகிறார்.

News June 19, 2024

பெண்கள் துன்புறுத்தல் தொடர்பாக 12,600 புகார்கள்

image

பெண்கள் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 2024ஆம் ஆண்டில் இதுவரை தேசிய மகளிர் ஆணையத்துக்கு 12,600 புகார்கள் வந்துள்ளன. அதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் இருந்து 6,492 புகார்கள் வந்துள்ளன. டெல்லியில் 1,119, தமிழகத்தில் இருந்து 304 புகார்கள் வந்துள்ளன. மொத்த புகார்களில் 3,567 புகார்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டது தொடர்பானவை, 1,963 புகார்கள் வரதட்சணை கொடுமை தொடர்பானவை ஆகும்.

News June 19, 2024

மக்களவை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும் முறை

image

மக்களவை சபாநாயகர் பொதுவாக மத்தியில் ஆளும் கட்சி அல்லது கூட்டணியில் இருந்து தேர்வு செய்யப்படுவார். இம்முறை துணை சபாநாயகர் பதவி தரவில்லையெனில் சபாநாயகர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அப்படி நிறுத்தினால், முதல்முறையாக தேர்தல் நடைபெறும். அப்போது மக்களவையில் இருக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் வாக்கை பெறுபவர் சபாநாயகராக தேர்வாவார்.

News June 19, 2024

கேப்டன் பதவியில் இருந்து கேன் விலகல்

image

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் அவ்வணி, லீக் சுற்றிலேயே வெளியேறியதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். வில்லியம்சனின் இந்த முடிவு குறித்து உங்களது கருத்து என்ன?

News June 19, 2024

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்கி, 9 நாள்கள் நடைபெறவுள்ளது. முதல் நாளான நாளை மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தியதும் அவை ஒத்திவைக்கப்படும். நாளை மறுநாள் காலை கேள்வி நேரத்துடன் அலுவல் தொடங்கவுள்ளது. தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும். இதில், காவேரி விவகாரம், சட்டம் ஒழுங்கு விவகாரம் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

News June 19, 2024

கவர்ச்சியில் எல்லை மீறுகிறாரா ரஷ்மிகா?

image

நடிகை ரஷ்மிகா பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய பின் அதிக கவர்ச்சி காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து பேசிய அவர், “ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமானியர்கள் போலத்தான் வாழ வேண்டும். அதுபோல, பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படிதான் நானும் இருக்கிறேன். அதேநேரம், எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மீற மாட்டேன்” என்றார்.

News June 19, 2024

மனைவி இறந்த சோகம் தாங்காமல் தற்கொலை

image

அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் காரணமாக கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்து, இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் அவர் துப்பாக்கியால் தன்னே தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News June 19, 2024

சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜுன் எரிகைசி

image

ஸ்டெபன் அவக்யன் நினைவு செஸ் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 9 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஆர்மீனியாவில் நடந்த இறுதிச்சுற்றில் டிரா செய்த அர்ஜுன், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். உலகத் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அவர், இந்த வெற்றியின் மூலம், லைவ் ரேட்டிங்கில் 2,778 புள்ளிகளை உறுதி செய்துள்ளார்.

error: Content is protected !!