India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக நீலகிரி தொகுதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி தொகுதியும் அடங்கும். அத்தொகுதியின் எம்எல்ஏவாக தனபால் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீலகிரி தொகுதியில் இருந்து ஆ.ராசா 2 முறை (2009 & 2019) மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துரை வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். முன்னதாக அவர், வைரமுத்து வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். இதுதொடர்பான புகைப்படத்தை X-ல் பதிவிட்ட வைரமுத்து, “தீயின் பொறி திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே குறி, வெல்வார் துரை” என அவர் வாழ்த்தியுள்ளார்.
புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனத்துக்கு தடை கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையர்களாக எஸ்.எஸ்.சாந்து, ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டனர். இதற்கு தடை விதிக்கக்கோரும் மனுக்கள் மீதான விசாரணையில், புதிய சட்டத்தில் அரசின் ஆதிக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு இலவசமாக செல்லலாம். இச்சலுகை குளிர்சாதனப் பேருந்துகளுக்கு பொருந்தாது.
வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா பாணியை எடப்பாடி பழனிசாமி கடைபிடித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் 80%க்கும் மேல் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை புதுமுகங்களையே அதிகளவில் களமிறக்குவார். அதே பாணியை இபிஎஸ்சும் கடைபிடித்திருப்பதை வேட்பாளர் பட்டியல் மூலம் அறிய முடிகிறது.
தேமுதிக அலுவலகத்திற்கு வந்த இபிஎஸ் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக-தேமுதிக இடையே நேற்று தொகுதி பங்கீடு இறுதியான நிலையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், விஜயகாந்த் மகன் விருதுநகரில் வேட்பாளராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் விருதுநகரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்தியாவின் 69.2 கோடி பெண்களில் 37% பேர் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதாக கரியா்நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு நிலை என்ற அதன் ஆய்வறிக்கையில், “இந்திய ஸ்டாா்ட்அப் நிறுவனங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதில் ஐதராபாத் 34 சதவிகிதத்துடன் முதலிடத்திலும் புனே 33% % சென்னை 29% உடன் முறையே 2 & 3ஆவது இடங்களில் உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்று ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் & பவுலிங் திறன் மூலம் ரஸல் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அவரைப் போல பந்து வீசி அணிக்கு தேவையான வெற்றியை பெற்றுத் தருவேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்ற கனவை நிஜமாக்க வேண்டும்” என்றார்.
பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்து நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், காலை முதல் 4 மணி நேரமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2022ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இச்சோதனை நடக்கிறது.
அமலாக்கத்துறை விசாரணை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், “அதிமுக நிர்வாகிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. அதிமுகவை பலவீனமான கட்சி என்று கருத வேண்டாம்” என்றார்.
Sorry, no posts matched your criteria.