India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், “அதிமுக – தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்கு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசியல் சாசனம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை உச்ச நீதிமன்றம் இக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய்களை குவித்துள்ளது. ஆனால், அடுத்தவர்களை ஊழல்வாதிகளாக காட்டுவதற்கு பாஜக அனைத்து வேலைகளிலும் ஈடுபடும். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் நாளேடுகள், தொலைக்காட்சியில் விளம்பரங்கள் செய்ய முடியவில்லை” என்றார்.
காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கி பாஜக அபாயகரமான விளையாட்டை விளையாடுவதாக அக்கட்சியின் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் 55% நிதி பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் 11% நிதி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், காங்கிரசின் வங்கிக் கணக்கை தேவையின்றி முடக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் வெற்றியை தடுத்து விடலாம்
என பாஜக நினைக்கிறது” என்றார்.
பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் தரப்புக்கு தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க பாஜக யோசித்து வருகிறது. அதே போல சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளை வழங்க மறுப்பதால் பாமக அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை தொகுதியை ஜி.கே.வாசனும் கேட்பதால் இந்த சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து
கருத்துகள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மெசேஜ் அனுப்புவதை நிறுத்த மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜகவில் திருச்சி தொகுதியை குறிவைத்து கோஷ்டி மோதல் தொடங்கியுள்ளது. திருச்சியில் பாஜக நிர்வாகி ராம.சீனிவாசன் போட்டியிடுவதற்கு அக்கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள ராம.சீனிவாசன், “அரசியல் பணியாற்றுவோர் அந்த மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்” என பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் சார்பிலும் பிரசாரம் செய்ய திரையுலக பிரபலங்கள் தயாராகி வருகின்றனர். திமுக சார்பில் வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், அதிமுக சார்பில் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், பபிதா, ஜெயமணி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக ராதிகா, குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய தயாராக உள்ளனர்.
தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டுமென வீடு வீடாக சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டி நடைபெறும் நேரம், எந்தெந்தத் தொலைக்காட்சிகளில் நேரலையில் காணலாம் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். தொடக்க நாளான நாளை நடைபெறும் முதல் போட்டி மட்டும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மற்ற போட்டிகள், மதியம் 3.30 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா ஓடிடியிலும் நேரலையாக காணலாம்.
Sorry, no posts matched your criteria.