India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜூன் 24இல் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய குளறுபடி, மோசடிகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

டி20 உலக கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே சென்று அந்நாட்டு அணிக்கு எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி ஜூலை 6இல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, கட்சிக்குள் இருக்கும் மோதல் குறித்து மேல்மட்ட குழுவிடம் தமிழிசை சௌந்தரராஜன் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. சொந்தக் கட்சியினரே தம்மை சமூக வலைதளங்களில் கேலி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியதாகத் தெரிகிறது. அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக பேசியதால் அவருக்கு எதிராக கட்சிக்குள் கலகம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கிவரும் கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக ரஜினியை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கார்த்திக் சுப்புராஜ், ரஜினியிடம் கதை கூறியதாகவும், ரஜினியும் அதற்கு ஓகே சொன்னதாகவும் தெரிகிறது. ரஜினி ‘கூலி’ படத்தை முடித்தபின் இருவரும் மீண்டும் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது. முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான ‘பேட்ட’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் சுரேஷ், பிரவீன், சேகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் பாஜகவின் பி டீம் போல அதிமுக செயல்படுகிறது என்ற செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். “பாஜகவுக்கும் எங்களுக்கும் ஒட்டு உறவு இல்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம். இடைத்தேர்தலில் பண ஆறு ஓடும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாது என்பதால் புறக்கணிக்கிறோம்” என்று அவர் விளக்கமளித்தார்.

வேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நடப்பாண்டில் 4 மாணவர்கள் 200/200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் 199.5 கட்ஆப் மதிப்பெண்ணும், 10 மாணவர்கள் 199 கட்ஆப் மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். இளங்கலை படிப்பிற்கு வந்த 33,973 விண்ணப்பங்களில் 29,969 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் படிக்க 10,053 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக மாநிலத் தலைமை அலுவலகங்களில் நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்படும் என காங்., பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும், நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.

சமையல் செய்யும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து அடிக்கடி உயிரிழப்புகள், பொருள் இழப்புகள் நேரிடுவதை பார்த்திருப்போம். அதுபோன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், கேஸ் நிறுவனமே இழப்பீடு அளிக்க வேண்டுமென சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் வெடித்ததும், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கேஸ் நிறுவனத்தில் சமர்பித்து இழப்பீடு கோரலாம்.

விமானம், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அண்மையில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மிரட்டல்களில் பெரும்பாலானவை வதந்தியாகவே இருக்கும். இந்த மிரட்டலையடுத்து விமானங்கள், பயணிகள், விமான நிலையங்கள் சோதிக்கப்படுவதால் விமான சேவை பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, பொய் மிரட்டல் விடுப்போருக்கு விமானத்தில் பயணிக்க 5 ஆண்டு தடை விதிக்க விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.