India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கிக் கணக்கை சரிபார்க்காமல் வருமானவரி அறிக்கை தாக்கல் செய்தால், வரி ரீபண்ட் கிடைக்காது என மத்திய வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான X பதிவில், “வங்கிக் கணக்கை வேலிடேட் செய்தவுடன் மீண்டும் ஒருமுறை டாக்ஸ் ரீபண்ட் பெற, Refund Reissue Request கோர வேண்டும். அதன்பிறகு, Validation செய்து முடித்த உடன், மீண்டும் ரீபண்ட் கோர வேண்டும்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. அஜர்பைஜானில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டதால், ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடித்து வந்தார். இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக மீண்டும் படக்குழு அஜர்பைஜானுக்கு கிளம்பியதாகவும், தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், சில குளறுபடிகள் நடந்ததன் காரணமாக, அந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டும் எனக் கூறுவது தவறானது என்றார். மேலும், யார் நினைத்தாலும் நீட் தேர்வை தவிர்க்க முடியாது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 26 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, 4 பேர் உயிரிழந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்த 4 பேர் ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவரும் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆற்றல் மற்றும் டிஜிட்டல் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அளவிலும், உலகளவிலும் இவ்விரு துறைகளிலும் ட்ரில்லியன் டாலர் வாய்ப்புகள் இருப்பதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் $100 பில்லியன் முதலீடு செய்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு தேவையான அனைத்து தயாரிப்புகளையும் உருவாக்கவுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை மறுபதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசி செய்தி ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்த அவர், 5 மாதங்களுக்கு முன்பே ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டதாகவும், இருமுறை தமிழகத்தில் பதிவு செய்யும் நடைமுறையை தாமதப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40ஆவது முறையாக ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ED வழக்கு மீதான தீர்ப்பை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் புதிதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற ஜூலை 1 முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களான பேருந்து, லாரிகளின் விலையை 2% வரை உயர்த்தியுள்ளது. அந்த வாகன மாடல்களுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும் என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி செலவின அதிகரிப்பால் வணிக பயன்பாடு வாகன விலையை டாடா உயர்த்தியது. அதையடுத்து மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் 22, 23ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 22ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும், 23ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு டிடிவி தினகரன் சென்றிருந்தார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசியதாகவும், அப்போது இபிஎஸ்க்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார், அவரது உறவினருக்கு எதிராக பெங்களூரில் நடக்கும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.