India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 136, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 103* ரன்கள் அடித்து அசத்தினர். ஷஃபாலி வர்மா 20, ஹேமலதா 24, ரிச்சா கோஷ் 25ரன்கள் எடுத்தனர். முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் 10 பேரில் 7 பேர் உயிரிழப்பதாகவும், வளர்ந்த நாடுகளில் 10க்கு 3 பேர் மட்டுமே உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஏழை மக்கள் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதற்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் இல்லை எனக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் ஜூன் 22ஆம் தேதி தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், போக்கிரி, மாஸ்டர் ஆகிய படங்கள் அன்றைய தினம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. மேலும், கில்லி படமும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நடிகரின் 6 படங்கள் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆவது இதுவே முதல் முறை. இந்த 6 படங்களில் நீங்கள் எந்தப் படத்திற்கு செல்வீர்கள்?

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவாலிடம், விரிவான விசாரணை நடத்துவதற்காக அவரது காவலை நீட்டிக்க ED கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து, வழக்கை ஒத்திவைத்தது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் இதுவரை 15 மீனவர்கள், 162 விசைப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனே மீட்க வலியுறுத்தியுள்ளார். இலங்கை வசம் கச்சத்தீவு சென்றதில் இருந்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடிப்பது வாடிக்கையாகியுள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில், சாராய வியாபாரி கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளச்சாராயத்தால் இறந்ததாக கூறப்படும் 4 நபர்களும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் புதிய தகவல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்படவுள்ளது. முழு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கள்ளச்சாராயத்தால் இறப்பா என உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவர் ஒருவருக்கு பீகார் அமைச்சர் உதவியது அம்பலமாகியுள்ளது. பாட்னாவில் நீட் தேர்வு எழுதிய அனுராக் என்ற மாணவர், அமைச்சர் ஒருவரின் பரிந்துரையின்பேரில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். வினாத்தாள் கசிவு புகாரில் கைது செய்யப்பட்ட சிக்கந்தர், அமைச்சர் பரிந்துரை பேரில் மாணவரை அழைத்து சென்றுள்ளார். இதுதொடர்பாக அனுராக்கை வரவழைத்து பாட்னா போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் அடித்துள்ளார். சிறப்பாக ஆடிவரும் அவர் 103 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் அடித்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியிலும் இவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் 51* ரன்களுடன் ஆடி வருகிறார். தற்போது இந்தியா 40 ஓவர்கள் முடிவில் 207/2 ரன்கள் எடுத்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தனது மனைவி, மகளை மிரட்டி சொத்தை அபகரித்ததாக காவல்நிலையத்தில் கரூரை சேர்ந்த பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார். இவர் புகாரில்தான் பைனான்சியர் கரூர் அன்புநாதனும் கடந்த ஆண்டு கைதானார். இந்த பிரகாஷ், எம்ஆர் விஜயபாஸ்கரின் பினாமி, அவரின் பணத்தில் தனது மனைவி, மகள் பெயரில் பிரகாஷ் சொத்து வாங்கியதே பிரச்னைக்கு காரணமென்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.