India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர். செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த 3 பேர் உடல்சிதறி பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
அடுத்த வருடம் மும்பை அணியில் ரோகித் விளையாட வாய்ப்பு இல்லை என பாக்., முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதில், கம்பீர் ஆலோசகராகவும், ஸ்ரேயாஸ் கேப்டனாகவும் உள்ள கொல்கத்தா அணியில் ரோகித் இணைந்து, ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று, தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித், 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
INDIA கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடியால் தடுக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் மோடி இட்டுக்கட்டி பேசுவதாக கூறிய அவர், நாள்தோறும் நச்சுக்கருத்துக்களை பரப்புரை என்ற பெயரில் பிரதமர் செய்து வருவதாக விமர்சித்துள்ளார். முன்னதாக, பிரதமரின் பேச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி, 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் 8 மற்றும் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தொடர் விடுமுறை காரணமாக மற்ற ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மட்டும் 50%க்கும் குறைவான பயணிகளுடன் காலியாக இயங்குவதாக கேரள காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. IRCTC தளத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அதன் X பக்கத்தில் வெளியிட்டுள்ள கேரள காங்கிரஸ், கட்டணம் அதிகமாக இருப்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே வந்தே பாரத் ரயிலை பயன்படுத்த முடியும் எனத் கூறியுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு 5 நாள்கள் ஆகியும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஜெயக்குமாரின் மகன்கள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சிபிசிஐடி அதிகாரி உடன் தனிப்படை போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் PIN நம்பரை யாருக்கும் பகிர வேண்டாம் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், 100இல் 27 பேர் ஒரே மாதிரியான PIN நம்பர்களை வைத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, 1234, 0000, 1111, 1313, 2000, 7777, 2222, 1212, 1004, 4321, 1010, 6969, 2001, 1122, 5555, 3333, 6666, 4444, 1111, 8888, 9999 ஆகிய எண்களையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
2020-21ஆம் ஆண்டில் ₹64,084 கோடியாக இருந்த பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 3 மடங்கு அதிகரித்து ₹1.79 லட்சம் கோடியாகவும், ₹1.07 லட்சம் கோடியாக இருந்த பங்குகள், கடன் பத்திரங்கள் மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 2 மடங்கு உயர்ந்து ₹2.06 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. அதேநேரம், குடும்பங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் ₹6.05 லட்சம் கோடியில் இருந்து ₹11.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், வரும் செவ்வாய்க்கிழமை அவரை டிஸ்சார்ஜ் செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.