News March 22, 2024

இன்று அமைச்சராகிறார் பொன்முடி

image

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பொன்முடியின் குற்ற வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டபோதிலும் அவரை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து “அவருக்கு சட்டம் தெரியுமா தெரியாதா” என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் இன்று மோதல்

image

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னையில் களம் காண்கின்றன. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

News March 22, 2024

பாஜக போட்டியிடும் தொகுதிகள்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தமிழக அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகை, தஞ்சை, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

News March 22, 2024

நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம்

image

நாமக்கல் தொகுதிக்கு கொமதேக சார்பில் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்ற கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், சாதிய வன்முறையை தூண்டும் வகையில் சூரியமூர்த்தி பேசும் பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியது.

News March 22, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை ➤ இன்று வெளியாகிறது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ➤திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். ➤ ஐ.பி.எல் 17ஆவது சீசன் சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

News March 22, 2024

உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு மீது இன்று விசாரணை

image

அமலாக்கத்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, நேற்றிரவே கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுவாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.

News March 22, 2024

திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருச்சி சிறுகனூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

News March 22, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மார்ச் 22 ▶பங்குனி – 9 ▶கிழமை: வெள்ளி ▶ திதி: திரயோதசி ▶நல்ல நேரம்: காலை 09.30 – 10.30, மாலை 02.00 – 03.00 ▶கெளரி நேரம்: காலை 12.30 – 01.30, மாலை 06.30 – 07.30 ▶ராகு காலம்: காலை 10.30 – 12.00 ▶எமகண்டம்: மாலை 03.00 – 04.30 ▶குளிகை: காலை 07.30 – 09.00 ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News March 22, 2024

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்

image

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐ.பி.எல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, மாலை 6.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும் தொடக்க விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News March 22, 2024

குமாரசாமிக்கு மீண்டும் இதய அறுவை சிகிச்சை

image

சென்னையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதுகுறித்து அவரது மகன் நிகில் தனது X பக்கத்தில், என் தந்தைக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெற்றிகரமாக இதய அறுவை சிசிச்சை நடைபெற்றது. அனைவரது பிரார்த்தனையால் அவர் நலமாக உள்ளார். அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி என பதிவிட்டார். குமாரசாமிக்கு ஏற்கெனவே 2 முறை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

error: Content is protected !!