India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிரிக்கெட் விளையாட்டு வியாபாரமாக மாறிவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறியுள்ளார். ஐபிஎல் போன்ற போட்டிகளில் அதிகப்படியான பணம் கிடைப்பதால், வீரர்கள் அதில் விளையாட ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்த அவர், எனினும் நாட்டுக்காக விளையாட முடியாத பல வீரர்களுக்கு இது ஒரு மாற்று வாய்ப்பாக உள்ளது என்றார். ஐபிஎல், இங்கி., கவுண்டி தொடர்கள் வீரர்களின் பணக்கஷ்டத்தை தீர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

குடி, குடியைக் கெடுக்கும். இந்த பழக்கத்தில் இருந்து விடுபட சில யோசனைகளை மனநல மருத்துவர்கள் அளிக்கின்றனர். *ஏதேனும் பணியைத் திட்டமிட்டு செய்து, தனியே இருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் *மது அருந்த வேண்டிய சூழல் வந்தால், லஸ்ஸி, க்ரீன் டீ அருந்தலாம் *யோகா, பிரானயாமா, மெடிடேஷன் மேற்கொள்ளலாம் *மது அருந்தும் காட்சியை காண்பதைத் தவிர்க்கவும் *குடும்பத்தினருடனான நேரத்தை அதிகரிக்கவும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகியுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி அங்கு நேரில் செல்லவுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். கோவிந்தராஜன் என்பவரிடம் பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்த 35 பேர் இதுவரை உயிரிழந்துள்ள சூழலில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து, ஒரு சவரன் ₹53,600க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து, ₹6,700க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ₹97.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. இன்று முதல் 22ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெறும். கடைசி நாள் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத் தொடர் நிறைவடையும். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பார்.

மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் அதனை வாங்க உரிமம் வைத்திருப்பது அவசியம். அதுபோக, வாங்கும் மெத்தனாலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? போன்ற விவரங்களை பதிவு செய்து பராமரிக்க வேண்டும். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் மெத்தனாலை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் விற்பனை செய்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் அனைத்தும் மூடப்பட்டு முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக சில கடைகள் மூடப்பட்டன. பிறகு தேர்தலில் திமுகவும் மதுவிலக்கு குறித்து பிரசாரம் செய்தது. இருப்பினும் 2 கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டு வரவில்லை. ஆதலால், இனிமேலும் இந்த விவகாரத்தில் தாமதிக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள விஜய், உயிரிழப்பு மிகுந்த அதிர்ச்சி, மன வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 38, நிக்கோலஸ் பூரன் 36, பவல் 36 ரன்களை எடுத்தனர். இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் பிலிப் சால்ட் 87, ஜானி பேர்ஸ்டோவ் 48 ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு உதவினர்.

மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள்.
Sorry, no posts matched your criteria.