India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 3 மாதங்களுக்குள் இந்த ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆணையம் ஆலோசனை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சுரேஷ் என்பவர் முதலில் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கிற்கு சென்றவர்களுக்கும் சாராயம் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அறிந்தும், மற்றவர்களும் அந்த விஷச்சாராயத்தை குடித்துள்ளனர். இதையடுத்து, ஒருவர் பின் ஒருவராக வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

பொதுவாக கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாமல் விஷச்சாராய விற்பனை நடக்கிறது. இந்த பகுதிகளை கண்டுபிடித்து, குழுக்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விஷச்சாராய தொழிலில் ஈடுபடுவோர் குறித்து தகவல் அளிக்க தொடர்பு எண்களை அறிவித்து, கிராமங்களில் அனைவர் கண்களிலும் படும்படி விளம்பரப்படுத்த வேண்டும். பின்னர் அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

விஷச்சாராய விற்பனையைத் தடுக்கவும், அது குறித்து புகார் அளிக்கவும் தமிழக அரசு ஏற்கெனவே கட்டணமில்லா தொலைபேசி எண்ணை நடைமுறைப்படுத்தி வருகிறது. 10581 என்ற அந்த எண்ணுக்கு உங்கள் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு, எதிர்முனையில் இருக்கும் அதிகாரியிடம் எங்கு, யார் விஷச்சாராய விற்பனை செய்கிறார்கள் என புகார் அளித்தால், அதன்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ODI வரலாற்றில் ஒரே போட்டியில் நான்கு வீராங்கனைகள் சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். IND Vs SA அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 325 ரன்களை இந்திய அணி குவித்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 136 மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் 103 ரன்களை எடுத்தனர். SA அணியில் மரிஸான் கேப் 114 மற்றும் லாரா வோல்வார்ட் 135 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் இந்திய அணி வென்றது.

இதுவரை அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து மட்டுமே கூறி வந்த தவெக தலைவர் விஜய் முதல்முறையாக விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு தமிழக அரசை விமர்சித்துள்ளார். அவரது x பதிவில், கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

*1878ஆம் ஆண்டு பாம்பே அக்பரி சட்டம்- முதல் முறையாக நாட்டில் விஷச்சாராயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம் இதுவாகும். *1949ஆம் ஆண்டு பாம்பே மதுவிலக்கு சட்டம் – பாம்பே மாகாணத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம் *1949ஆம் ஆண்டு குஜராத் மதுவிலக்கு சட்டம் – இந்த சட்டம் மூலம் குஜராத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மீறுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைக்கு வழிவகுக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்ட 7ஆவது பகுதியில், மதுபானம் மாநில அரசுகளின் அதிகார வரையறைக்கு உட்பட்டது என்றும், 47ஆவது பிரிவில், மதுபானத்திற்கு எதிராக சட்டத்தை வகுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில மாநிலங்களில் மட்டும் சாராய விற்பனைக்கு எதிராக சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அங்குள்ள அரசுகளால் அமல்படுத்தப்பட்டுள்ளன.

*2016 பிஹார் மதுவிலக்கு சட்டம்- இந்தச் சட்டம் மூலம் பிஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, அதை மீறுவோருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது * மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு அமல்படுத்த சட்டம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கைக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு?
Sorry, no posts matched your criteria.