News June 20, 2024

முதல்வர் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி

image

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானமும் விஷச்சாராயத்திற்கு இணையானது தான் என்றார். மேலும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

உயிரிழப்பை ஏற்க முடியாது: செல்வப்பெருந்தகை

image

கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக மக்களின் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் உதவி இல்லாமல் இந்த துயர சம்பவம் நிச்சயம் நடைபெற்றிருக்காது என்ற அவர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக முதல்வரை பதவி விலக வலியுறுத்துவார்கள் எனவும் கூறியுள்ளார்.

News June 20, 2024

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் ஒருவர் கூட விடுபடாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்து, மதுபானக் கடைகளை படிப்படியாகக் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News June 20, 2024

39 உயிர்களை காவு வாங்கிய வீடு

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரத்தில் மேற்கண்ட படத்தில் இருக்கும் வீட்டில் வைத்தே கோவிந்தராஜன் சாராயம் விற்பனை செய்துள்ளார். அவரிடமிருந்தே ஊர் மக்கள் சாராயம் வாங்கியுள்ளனர். இதில், சுரேஷ் என்பவர் பலியான நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த 200க்கும் மேற்பட்டோருக்கும் சாராயம் வழங்கப்பட்டதில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

News June 20, 2024

தென்னிந்திய சிமெண்ட் சந்தையை கைப்பற்ற போட்டி

image

நாட்டிலேயே தென்மாநிலங்களில் தான் கட்டிடங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அதிகம் அமைக்கப்படுகின்றன. எனவே, சிமெண்ட் தேவை அதிகரித்திருப்பதால், அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த நாட்டில் தயாராகும் சிமெண்டில் அதிகபட்சமாக தென்மாநிலங்களில் 33% உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சந்தையை கைப்பற்ற அதானி குழுமம், ராம்கோ போன்ற நிறுவனங்கள் விரிவாக்கத்தை தொடங்கியுள்ளன.

News June 20, 2024

நேரில் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனைக்குச் சென்ற அவர், அவர்களது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து உயிரிழந்தோரின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவிருக்கிறார்.

News June 20, 2024

சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்த 32 பேர் மீட்பு

image

கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்து 32 பேரை மருத்துவத்துறை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்பதால் கள்ளக்குறிச்சி, சேலத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். முன்னதாக, இன்று காலை விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனிக்குழு அமைத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News June 20, 2024

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கெஜ்ரிவால் ஊழல் செய்ததற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதால், அவருக்கு ஜாமின் தரக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த வழக்கின் இறுதி கட்ட வாதம் இன்று நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

திரைத்துறையினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: டி.ஜெ.

image

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளச்சாராய பலி குறித்து திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை என்று சாடியுள்ளார். விஜய் மட்டும் குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்? என கேள்வியெழுப்பியுள்ள அவர், மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையினரை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

News June 20, 2024

விஷச்சாராய மரணம் வேதனை அளிக்கிறது: முதல்வர்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக கூறியுள்ளார். தன்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய இந்நிகழ்வு நடந்திருக்கக் கூடாது என்று கூறிய அவர், விஷச்சாராய விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர்தர சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் கூறினார்.

error: Content is protected !!