News June 20, 2024

தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை

image

நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மையில் எந்தவித சமரசமும் கிடையாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் நலனே முக்கியம்; அதை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய அவர், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்த உயர்மட்டக்குழு அமைக்கப்படும்; தேவைப்பட்டால் தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

News June 20, 2024

அடுத்த 3 தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு

image

வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் செப்., முதல் பிப் 2025 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் BANக்கு எதிரான முதல் டெஸ்ட் (செப்.,19-23) மற்றும், ENGக்கு எதிரான முதல் T20 (2025 ஜன., 22) சென்னையில் நடைபெற உள்ளது. BAN – 2 டெஸ்ட், 3 T20, NZ -3 டெஸ்ட், ENG – 5 T20, 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது.

News June 20, 2024

கோவையில் மதுவிற்ற 98 பேர் கைது

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 39 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, கோவையில் கள்ளச்சாராயம் விற்ற 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 203 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும் திடீர் சோதனை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

News June 20, 2024

கருப்பு பேண்டுடன் விளையாடும் இந்திய வீரர்கள்

image

டி20 உலகக் கோப்பையில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பேண்டு அணிந்து விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் பெங்களூருவில் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இன்று உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கருப்பு பேண்டு அணிந்துள்ளனர்.

News June 20, 2024

ஜூன் 24இல் தமிழகம் முழுவதும் போராட்டம் : அதிமுக அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, ஜூன் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும், உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

News June 20, 2024

நீட்டை ரத்து செய்ய முடியாது

image

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் ஏதோ ஒரு பகுதியில் நடந்த முறைகேடு காரணமாக, நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், உயர்மட்டக் குழு அளிக்கும் பரிந்துரைக்கு பிறகு, தேசிய தேர்வு முகமை நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

News June 20, 2024

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மக்களைத் தேர்தல் பிரசாரத்திற்காக இடைக்கால ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், பரப்புரை முடிந்து ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடைந்ததை அடுத்து, ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளனர்.

News June 20, 2024

சுடுகாட்டில் சாராயம் விற்ற கண்ணுக்குட்டி

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சேகரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில், கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதிரன் ஆகியோர் ஊர் சுடுகாட்டில் சாராயம் விற்று வந்ததாகவும், 18ஆம் தேதி அவர்களிடம் சாராயம் வாங்கிக் குடித்ததால் வயிறு வலியால் துடித்த சேகரன் மற்றும் பிரவின், சுரேஷ் உள்ளிட்டோர் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 20, 2024

சிபிஐ விசாரணை கோரி அண்ணாமலை கடிதம்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அண்ணாமலை அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த இரண்டாண்டுகளில் தமிழகத்தில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் காவல்துறைக்கு தெரிந்தே இவை நடப்பதாகவும் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். கள்ளச்சாராய விற்பனையில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

News June 20, 2024

T20 WC: இந்திய அணி பேட்டிங்

image

டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இப்போட்டி நடைபெறும் மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிராஜுக்குப் பதில் குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணி: ரோஹித், கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார், டூபே, பாண்டியா, ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப், அர்ஷ்தீப் சிங், பும்ரா.

error: Content is protected !!