News June 20, 2024

பும்ராவின் ரசிகனாக இருப்பதில் பெருமை: ஆம்ப்ரோஸ்

image

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் பும்ரா மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கிரிக்கெட் வீரர் என்று புகழ்ந்துள்ளார். சாதாரண வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது பும்ரா வித்தியாசமானவர் என்றவர், நான் அவருடைய தீவிர ரசிகன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், பும்ரா காயமடைந்தால் தவிர அவருக்கு அணியில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 20, 2024

உங்கள் பெயர் “B” என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா?

image

B எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் உடையோரின் குணாதிசயம் குறித்து ஜோதிட சாஸ்திரம் கூறுவதை தெரிந்து கொள்வோம். *B எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டோர் இயல்பாக மகிழ்ச்சியாக இருப்பர் * அனைவரையும் எளிதில் நம்புவர் *செய்யும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்வர் *குடும்பம் மீது ஈடுபாடு கொண்டவர்கள் * லட்சியவாதிகள் *திறந்த மனதுடன் பழகக்கூடியவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

News June 20, 2024

ஓலா ஐபிஓ வெளியிட செபி ஒப்புதல்

image

இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா, பொது பங்குகளை வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களை பங்குச்சந்தை கட்டுபாட்டு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், ஆவணங்களை சரிபார்த்த செபி, ஐபிஓ வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐபிஓ மூலமாக ₹5,500 கோடி நிதி திரட்ட உள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது

News June 20, 2024

பிரதமர் வாகனம் மீது செருப்பு வீச்சு கண்டிக்கத்தக்கது

image

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, அம்மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசிக்கு சென்றார். அப்போது மோடியின் கான்வாய் வாகனம் மீது மர்ம நபர்கள் சிலர் செருப்பு வீசி தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அரசின் கொள்கைகளுக்கு எதிராக காந்திய வழியில் போராட வேண்டுமே தவிர, வெறுப்பு மற்றும் வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – நற்செயலில் ஈடுபடுங்கள், *ரிஷபம் – லாபம் உண்டாகும், *மிதுனம் – பக்தியுடன் இருங்கள், *கடகம் – திறமையாக செயல்படுங்கள், *சிம்மம்- சலனம் ஏற்படலாம், *கன்னி – தேர்ச்சி பெறுவீர்கள், *துலாம் – இன்பமான நாள், *விருச்சிகம்- பொறுமை அவசியம், *தனுசு – மறதி ஏற்படலாம், *மகரம் – களிப்புடன் இருங்கள், *கும்பம் – பெருமையடைவீர்கள் *மீனம் – முயற்சி வெற்றியாகும்.

News June 20, 2024

100 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான காலம்: ஜோதிடர்கள்

image

100 ஆண்டுகளுக்குப் பிறகு, பேரிடர் காலமாக கருதப்படும் ஆஷாட மாதம் வரவுள்ளதாக ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர். இந்த காலத்தில், அசுப காரியங்கள் நடைபெறும் என கவலை தெரிவித்துள்ளனர். மேலும் வரும் ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை தத்ய திதி மற்றும் சதுர்த்தி திதிகள் குறைவதால், இந்த 13 நாள்களில் மனித உயிரிழப்புகள், நோய்த்தொற்று, இயற்கை சீற்றங்கள், சண்டைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

News June 20, 2024

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

விருதுநகரில் மாணிக்கம் தாகூரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், தேர்தல் ஆணையத்தை நாடினார். இந்நிலையில், பாஜக, தேமுதிக அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகரில் 14, வேலூரில் 6 வாக்குப்பதிவு மையங்களில் EVM-களையும், EVM-ல் வாக்குப்பதிவை சேகரித்து வைத்துள்ள மைக்ரோ கண்ட்ரோலர் கருவிகளையும் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News June 20, 2024

நெட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு

image

யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து, நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தேர்வு தொடர்பாக முழுமையான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

News June 20, 2024

நடிகர் அனுபம் கெர் அலுவலகத்தில் திருட்டு

image

மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் புகுந்த திருடர்கள் உடமைகளை திருடிச் சென்றதாக நடிகர் அனுபம் கெர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தயாரித்த படத்தின் நெகடிவ் மற்றும் சில பத்திரங்களை திருடியதாக கூறியவர், காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் திருடர்களை விரைவில் பிடிப்பதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார். தமிழில் அவர் விஐபி, லிட்டில் ஜான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

News June 20, 2024

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!