India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்த்து மற்ற கட்டணங்கள் உயர்வதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. 200 யூனிட்டுக்கு ₹55ம், 900 யூனிட்டுக்கு ₹1,130ம் கூடுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கமளித்த மின்வாரியம், கட்டண உயர்வு குறித்து கடந்த சில நாட்களாக உலா வரும் தகவல், பழைய செய்தி என்றும், அது 9.9.2022இல் உயர்த்தப்பட்ட கட்டண விகிதம் எனவும் கூறியது.
அட்சய திருதியில் அன்று முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை அடைய முடியுமென தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோருக்கு முறையாக கர்ம காரியங்களைச் செய்யாமல் விட்டவர்கள் நாளை (மே 10) அதிகாலையில் நீராடி, விரதமிருந்து சிவன் கோயிலுக்குச் சென்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு புண்ணிய பலன்களைப் பெறுங்கள்.
தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்துக்கான பத்ம பூஷன் விருதை அவருடைய மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார். முன்னதாக பேசிய அவர், கேப்டன் இல்லை என்கிற வலி மனதுக்குள் உள்ளதாகவும், இருப்பினும் மத்திய அரசின் உயரிய விருதை வாங்குவதில் தங்கள் கட்சியினர் ஒட்டுமொத்தமாக பெருமை அடைவதாகவும் கூறினார். மேலும், இந்த விருது அவரை விரும்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சமர்ப்பணம் என்றும் அவர் தெரிவித்தார்.
அட்சய திருதியை நாளில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு நகைகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு 25% வரை நகை விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நகைக் கடைகள் திறந்திருக்கும் எனவும், வீடுகளுக்கே நேரடியாக நகைகளை டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults.nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திரைத்துறையில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஜோதிகா. மும்பையைச் சேர்ந்த இவர், தமிழ் தெரியாத நடிகையாக சினிமாவில் நுழைந்து, முன்னணி நடிகர்களான கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து வெற்றி படங்களின் நாயகியாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகும் தனித்துவமான படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.30 உயர்ந்து ₹90க்கும், கிலோவிற்கு ₹1,300 உயர்ந்து ₹90,000க்கும் விற்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளங்குளத்தில் உள்ளது ‘அட்சயபுரீஸ்வரர் கோயில்’. அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். இங்கு வந்து ஈசனை வணங்க, எல்லா நன்மைகளும் வளரும் என்பது நம்பிக்கை. பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரக் கோயில் இதுவாகும். எத்தனை சம்பாதித்தாலும் சேர்க்க முடியவில்லை என்று வருந்துபவர்கள், இங்கு வழிபட்டால் செலவுகள் குறைந்து சேமிக்கும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
டி20 போட்டிகளில் கோலி மெதுவாக விளையாடி வருவதாக எழுந்த விமர்சனங்களுக்கு தனது சிறப்பான பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் விராட், அரை சதம் அடிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொள்வதாகவும், ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் 47 பந்துகளில் 92 ரன்கள் அடித்து 195.74 ஸ்ட்ரைக் ரேட் பெற்று, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.