India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு NEET, JEE தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்குவது குறித்த வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு NEET, JEE தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில், தலைமை ஆசிரியர்கள் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்று 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, தாமோதரன் விஜயா ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், கருணாபுரம் மக்கள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் மிக கனமழை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் ஜூன் 23ஆம் தேதியும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருந்து விலகி, 13 ஆண்டுகளுக்கு பிறகு பாமக விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் தோல்வி, மாநில அந்தஸ்து இழப்பு என்று தேர்தல் அரசியலில் திணறி வரும் அக்கட்சி, விக்கிரவாண்டியில் தங்களின் இருப்பை தக்கவைக்க போராடி வருகிறது. இந்த அரசியல் போராட்டத்தில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது ஜூலை 13இல் தெரியவரும்.

பதுக்கல் அதிகரிப்பால் பூண்டு விலை கிலோ ₹350ஆக உயர்ந்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் தான் பூண்டு அதிகம் சாகுபடி செய்து நாட்டின் ஒட்டு மொத்த தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வர்த்தகர்கள் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனர். இதனால், செயற்கையாக தட்டுபாடு ஏற்படுத்தப்பட்டு, விலை உயர்கிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு மீது 24ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 26ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 10இல் வாக்குப்பதிவும், 13இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணித்த நிலையில், திமுக, பாமக போட்டியிடுகின்றன.

போஸ்ட் SMS மோசடிகளில் இருந்து மக்கள் கவனமாக இருக்குமாறு PIB எச்சரித்துள்ளது. இது தொடர்பாக Xஇல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தபால் நிலையத்தில் இருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் முகவரியை தெரியப்படுத்தவும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படும்” என போலியான லிங்குகள் அனுப்பப்படுவதாகவும், அதுபோன்ற லிங்கை கிளிக் செய்து ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கள்ளச்சாராயம் பற்றி ஏற்கனவே புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கள்ளச்சாராயத்திற்கு 49 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

‘யோகா’ என்ற சமஸ்கிருத சொல் ‘ஓகம்’ என்ற தமிழ் சொல்லை அடிப்படையாக கொண்டது. ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன் கலத்தல் என பொருள். ஐந்து புலன்கள், சூட்சும உடல், மனம் முதலியவை ஒன்றிணைந்து செய்யப்படுவதே ஓகம். உடலின் ஆற்றலை வெளிமுகமாக வீணடிக்காமல், உள்முகமாகத் திருப்பி ஒடுக்க சித்தர்கள் ஓக சூட்சுமத்தை மக்களுக்கு சொல்லிக்கொடுத்தனர். எனவே ஆரோக்கியமான, அமைதியான வாழ்வைப் பெற ஓகக்கலையை பயில்வோம்!
Sorry, no posts matched your criteria.