News June 21, 2024

அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் உத்தரவு

image

கள்ளச்சாராயம் விற்பனை குறித்தத் தகவல்களை தெரிவிக்குமாறு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததில், இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், அனைத்து மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கடை அமைந்துள்ள பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரியவந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News June 21, 2024

TNPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் TNPL போட்டிகளின், 8ஆவது சீசன் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் 17 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Paytm Insider மூலம், மாலை 6 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும். ஒரு டிக்கெட் விலை ₹200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம் உள்பட 5 முக்கிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

News June 21, 2024

கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக MLAக்கள்

image

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, அதிமுக MLAக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், திமுக அரசைக் கண்டிக்கும் வகையிலும் அதிமுக MLA-க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தவாறு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

News June 21, 2024

AUS-BAN ஆட்டம் மழையால் பாதிப்பு

image

T20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. முதலில் விளையாடிய BAN அணி 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 141 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய AUS அணி, 6.2 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி சற்று நேரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பு T20 WC தொடரின் பல ஆட்டங்கள் மழையால் பாதித்தது குறிப்பிடத்தக்கது.

News June 21, 2024

குழாய் எரிவாயு இணைப்பு பெற 30,000 பேர் பதிவு

image

வீடுகளுக்கு குழாய் வழியில் இயற்கை எரிவாயு இணைப்பு பெற தமிழகம் முழுவதும் காஸ் சிலிண்டர் விநியோக நிறுவனங்களிடம் இதுவரை 30,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த குழாய் வழி எரிவாயுவானது கேஸ் சிலிண்டருடன் ஒப்பிடும்போது 20% செலவு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது வாகனங்களுக்கு CNG எனப்படும் அழுத்தப்பட்ட எரிவாயுவாகவும், வீடுகளுக்கு PNG எனப்படும் குழாய் வழித்தடம் வாயிலாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.

News June 21, 2024

யார் இந்த பர்த்ருஹரி மஹ்தாப்?

image

இடைக்கால சபாநாயகராக தேர்வாகி உள்ள பர்த்ருஹரி மஹ்தாப் பிஜு ஜனதாதளம் கட்சியில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1998 முதல் கட்டாக் தொகுதி எம்பியாக தொடர்ந்து வருகிறார். 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பிஜு ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் போது அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

News June 21, 2024

காலை உணவில் இதை சேர்த்துக்கோங்க

image

மனித வாழ்வில் இன்றியமையாத காலை உணவை, எளிதில் ஜீரணமாகும் வகையில் சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாகத் தொடங்க வழிவகுக்கும். அந்த வகையில் பப்பாளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், பீட்ரூட், ஆப்பிள், ப்ராக்கோலி ஆகியவற்றை காலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், சகல பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

News June 21, 2024

தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் இதே நாள்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அடுத்த 3 நாள்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 21, 2024

கோலியின் சாதனையை சமன் செய்த சூர்ய குமார் யாதவ்

image

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்ய குமார் யாதவ் சமன் செய்துள்ளார். விராட் கோலி 120 போட்டிகளில் பங்கேற்று 15 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். ஆனால், சூர்ய குமார் யாதவ் வெறும் 64 போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 முறை ஆட்ட நாயகன் விருதைப் வென்றுள்ளார். விரைவில் கோலியின் சாதனையை அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

News June 21, 2024

வன்முறையை தூண்டுகிறதா RJ பாலாஜி படத்தின் போஸ்டர்?

image

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், RJ பாலாஜி ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பா X பதிவில், கேக்கில் ரத்தக் கறையுடன் கத்தி, மேசையில் மது பாட்டில், துப்பாக்கி, கத்தி, சுத்தியல், பிளேடு ஆகியவை சிதறிக் கிடக்கின்றன. இது தொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் போஸ்டர் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!