News November 11, 2025

தனியாக பயணம் செய்ய சிறந்த நாடுகள்.. No. 1 எது தெரியுமா?

image

நீங்கள் தனியாக பயணம் செய்ய நினைக்கிறீர்களா? சுற்றுலா நிறுவனமான கென்சிங்டன் டூர்ஸ் சமீபத்தில் வெளியிட்ட ‘தனியாக பயணிக்க சிறந்த நாடுகள்’ பட்டியலைப் பார்த்தீர்களா? டாப் 10 நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். முதலிடத்தில் உள்ள நாடு, உங்களை பெருமை அடைய செய்யும்.

News November 11, 2025

பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதி… NDTV கணிப்பு

image

பிஹார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை NDTV வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜேடியு-பாஜகவின் NDA கூட்டணி 152, ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகா கூட்டணி 84 , ஜேஎஸ்பி கட்சி 2, மற்றவை 5 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளின் படி பார்த்தால் NDA கூட்டணி ஆட்சி அமைப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.

News November 11, 2025

BIHAR: மாறுபட்ட கருத்துக் கணிப்புகள்

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் NDA கூட்டணி வெல்லும் என்றே கூறப்படுகிறது. Polstrat நடத்திய கணிப்பில் NDA கூட்டணி 133-148 இடங்களும், மகா கூட்டணி 87-102 இடங்களும், பிறர் 3-5 இடங்களும் வெல்லக் கூடும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், Poll Diary கருத்துக் கணிப்பில் 184-209 இடங்களுடன் NDA ஃபுல் ஸ்வீப் செய்யுமாம். மகா கூட்டணிக்கு 32-49 இடங்கள், மற்றவைக்கு 1-5 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம்.

News November 11, 2025

பிரபல பாடகிக்கு திருமணம் முடிந்தது ❤️❤️

image

KGF படத்தின் மெஹபூபா, தீரா தீரா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடிய அனன்யா பட்டிற்கு இன்று திருமணம் முடிந்தது. டிரம்மர் மஞ்சுநாத்தை அவர் கரம்பிடித்துள்ளார். திருமலையில் நடைபெற்ற திருமணத்தில், குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர். திருமண போட்டோஸை அவர் SM-ல் பதிவிட்டதை அடுத்து, நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. லைக் செய்து நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லலாமே..!

News November 11, 2025

2 தொகுதிகளை வெல்லும் பிரசாந்த் கிஷோர் கட்சி?

image

பிஹார் தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட 243 தொகுதிகளில் 10 தொகுதிகளில் கூட வெல்லாது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக தேர்தல் களம் காணும் அக்கட்சி அதிகபட்சமாக 2 தொகுதிகளை கைப்பற்றும் என People’s Insight கருத்துக்கணிப்பு கூறுகிறது. அக்கட்சி 5% வாக்குகளை பெறக்கூடும் என Matrize Bihar கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

தலைமுடியை மென்மையாக்க சில டிப்ஸ்!

image

➤தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முடியின் வேர் வரை தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசலாம் ➤சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுங்கள் ➤ஹேர் டிரையர்கள், ஸ்ட்ரைட்னர்கள் போன்ற சூடான கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ➤பிளாஸ்டிக் சீப்புகளுக்கு பதிலாக மர சீப்புகளை பயன்படுத்தலாம் ➤வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். SHARE THIS.

News November 11, 2025

பிஹாரில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா?

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. சாணக்யா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக-ஜேடியுவின் NDA கூட்டணி 130 முதல் 138 இடங்கள் வரை வெல்லும் என கணிக்கப்படுகிறது. தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 100 முதல் 108 இடங்களையும், மற்றவை 3-5 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது. 2 கூட்டணிக்கும் இடையே 30 இடங்களே வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 11, 2025

EXIT POLL: பிஹாரில் NDA கூட்டணி 145+

image

பிஹாரில் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் NDA கூட்டணி வெல்லும் என Dainik Bhaskar கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி 145-160 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. MGB கூட்டணி 73-91 தொகுதிகள் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதர கட்சிகள் 5 முதல் 10 தொகுதிகள் வரை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

BIHAR EXIT POLL: தேஜஸ்விக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு(NDA) சாதகமாகவே உள்ளன. MATRIZE-IANS உடன் இணைந்து ABP நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDA-வுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 147 முதல் 167 இடங்களை வெல்லும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்கள், மற்றவை 0-7 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

EXIT POLL: பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்பது யார்?

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Gyaan Ka Bhandar India வெளியிட்டுள்ள சர்வேப்படி, NDA: 165-175, MGB: 65-70, மற்றவை: 3-10 இடங்கள் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. People’s Insight கருத்து கணிப்பு முடிவில் NDA: 133-148, MGB: 87-102, JSP: 0-2, மற்றவை: 3-6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!