India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, விசிக தலைவர் திருமாவளவன் MP, ஆறுதல் கூறியுள்ளார். சம்பவத்தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நேரில் சென்ற அவர், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு, கட்சி சார்பில் தலா ₹10,000 நிவாரண உதவியையும் வழங்கினார்.

தமிழ்நாட்டில் போலி மதுபானம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 101 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலகுகள் செயல்பட்டு வருவதாகவும், 2023-24 ஆண்டில் எரிசாராய கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஷச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. வீடு வீடாகச் சென்று அங்கன்வாடி பணியாளர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனக் கூறிய நிலையில், தற்போது இந்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இரவு 9 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகள் WORK PERMIT-ஐ புதுப்பிக்க மறுத்ததால், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக, ஃபிரான்ஸ் செய்தியாளர் செபாஸ்டியன் ஃபார்சிஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், WORK PERMIT புதுபித்தலுக்காக பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2023 – 24 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹45,855.67 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டை விட, ₹1,734.54 கோடி கூடுதலாகும். 2022 – 23 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹44,121.13 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் வருவாய் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்ய முயன்ற போது தடுத்த மகளை, தந்தை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முற்பட்டபோது, அதை தடுத்து தாயிடம் கூறிவிடுவேன் என கூறியதால், 12 வயது மகளை கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு மகளை காணவில்லை என புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடி மற்றும் ஆபாச படங்களுக்கு அடிமையான தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 53 பேர் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், 2001இல் 53 பேர் உயிரிழந்த போது யாரும் ஜெயலலிதாவை பதவி விலகச் சொல்லவில்லை என்றார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையை கருதியே நிதியுதவி அளிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களையடுத்து தமிழகம் முழுவதும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூரில் கள்ளச்சாராயம் விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 667 லிட்டர் கள்ளச்சாராயம், 431 மது பாட்டில்கள், 2400 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊரல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்ற சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. முன்னதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில் தற்போது முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Sorry, no posts matched your criteria.