India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளச்சாராயம் குடித்து ஏற்கெனவே 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மே.வங்க காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகியிருக்கிறார். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்த இவர், டெல்லி மேலிடம் மம்தாவுடன் இணக்கம் காட்டுவதால் அதிருப்தியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, சந்தானம் கூட்டணியில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, சந்தானத்தின் நகைச்சுவை அப்படங்களுக்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்திருக்கும். இந்நிலையில், நடிகரும், தனது நண்பருமான சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க ஆர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

*நில உரிமையுள்ள நலிவுற்ற மக்கள் பயன்பெறும் வகையில், 1 லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும். *₹70 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் மேற்கொள்ளப்படும். *₹60 கோடி மதிப்பீட்டில் ஆறு பேருந்து நிலையங்கள் தலா ₹10 கோடியில் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

T20 WCல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டிகாக் 22 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் T20 WCல் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் உடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். அதிரடியாக விளையாடிய டிகாக் 3 ஃபோர், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவரது அதிரடியால் தெ.ஆ., 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் தமிழில் டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தமிழில் மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். T20 WC இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டியில் வர்ணனையாளராக பங்கேற்ற அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தொழில் 4.0 தொழில்நுட்பமைய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். *ரூ.24.90லட்சம் மதிப்பீட்டில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். *ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் 1000 பேருக்கு, ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை – 27, புதுச்சேரி ஜிப்மர் – 3, சேலம் அரசு மருத்துவமனை – 16, விழுப்புரம் அரசு மருத்துவமனை – 4 என இறப்புகள் பதிவாகியிருக்கின்றன. மேலும் 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என EPS குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் 3 ஆண்டுகளாக ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு தற்போது அதிகாரிகளை மாற்றிவிட்டேன் என்பது பொறுப்பற்ற தன்மை என்ற அவர், நீங்கள் அதிகாரிகளை மாற்ற 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? என வினவியுள்ளார். மேலும், உங்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான மகாராஜா திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் முதலில் விஜய் ஆண்டனி நடிக்க இருந்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இயக்குநர் நித்திலன் தன்னிடம் கதையை கூறியதாகவும், அதை விஜய் ஆண்டனியிடம் சொன்னபோது, கதை பிடித்து நடிக்க விருப்பம் காட்டியதாகவும், பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.