News June 22, 2024

T20 WC: ENG அணியை வீழ்த்தியது SA அணி

image

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 5ஆவது போட்டியில், ENG அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் SA அணி வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த SA அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ENG அணியை, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களுக்குள் சுருக்கி SA அணி த்ரில் வெற்றி பெற்றது.

News June 21, 2024

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுமதியளித்த பிசிசிஐ

image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் அணிக்கெதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெறவுள்ள இப்போட்டியை இந்தியாவில் நடத்த பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. அனைத்துப் போட்டிகளும் நொய்டாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும். முன்னதாக இதே மைதானத்தில் 2017ல் அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் தொடர் நடைபெற்றது.

News June 21, 2024

தடுமாறும் இங்கிலாந்து அணி

image

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது. சால்ட் 11, பட்லர் 17, பேரிஸ்டோ 16, மொயின் அலி 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News June 21, 2024

ஜூன் 22: 12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – களிப்புடன் இருங்கள், *ரிஷபம் – பெருமையடைவீர்கள், *மிதுனம் – ஜெயம் உண்டாகும், *கடகம் – பரிவு காட்டுங்கள் *சிம்மம்- பாசமாக இருங்கள், * கன்னி – பகையை தவிருங்கள், *துலாம் – பரிசு பெறுவீர்கள், *விருச்சிகம் – பாராட்டுக்கள் கிடைக்கும், *தனுசு – குழப்பம் ஏற்படலாம், *மகரம் – மேன்மையடைவீர்கள், *கும்பம் – நிம்மதியாக இருங்கள் *மீனம் – நஷ்டம் ஏற்படலாம்.

News June 21, 2024

புனே விபத்து: குற்றவாளியின் தந்தைக்கு ஜாமின்

image

புனேயில் கார் மோதி இருவர் மரணத்திற்கு காரணமான 17 வயது குற்றவாளியின் தந்தை விஷால் அகர்வாலுக்கு புனே செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. கடந்த மே 19ம் தேதி சிறுவன் குடிபோதையில் காரை ஓட்டி ஐடி ஊழியர்கள் இருவரின் உயிரிழப்புக்கு காரணமானார். இவ்வழக்கில் இருந்து மகனை விடுவிக்க ரத்த மாதிரிகளை மாற்றியதாக அவரது தாய் ஷிவானி அகர்வாலையும் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 21, 2024

விடிய விடிய மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்றிரவு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 21, 2024

VIRAL: கமலின் வித்தியாசமான கெட்டப்

image

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “கல்கி 2898AD”. இப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதில் கமலின் வித்தியாசமான கெட்டப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே நேரம் பலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர். இந்த கெட்டப் எப்படி இருக்கிறது? என கமெண்ட் பண்ணுங்க.

News June 21, 2024

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு

image

ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக NTA தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் அதை csirnet.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

News June 21, 2024

AIRTEL: ₹9க்கு 10GB டேட்டா

image

பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹9க்கு ரீசார்ஜ் செய்தால் 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆனால், இதற்கான validity 1 மணி நேரம் மட்டுமே. பெரிய ஃபைல்கள், படங்கள் ஆகியவற்றை டவுன்லோட் செய்ய இத்திட்டம் பயன்படும். மற்ற நிறுவனங்கள் 10 ஜிபி டேட்டாவை ₹100 வரை விற்கின்றன.

News June 21, 2024

பாலியல் வழக்கில் ₹7,521 கோடி நஷ்டஈடு

image

கோகோ கோலா நிறுவன வாரிசான அல்கி டேவிட், ஹாலோகிராம் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர், அல்கி டேவிட் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அல்கி டேவிட் $900 மில்லியன் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பாலியல் வழக்கு வரலாற்றில் மிகப்பெரிய தீர்ப்புகளில் இதுவும் ஒன்று.

error: Content is protected !!