India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults.nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திரைத்துறையில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஜோதிகா. மும்பையைச் சேர்ந்த இவர், தமிழ் தெரியாத நடிகையாக சினிமாவில் நுழைந்து, முன்னணி நடிகர்களான கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து வெற்றி படங்களின் நாயகியாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகும் தனித்துவமான படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.30 உயர்ந்து ₹90க்கும், கிலோவிற்கு ₹1,300 உயர்ந்து ₹90,000க்கும் விற்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளங்குளத்தில் உள்ளது ‘அட்சயபுரீஸ்வரர் கோயில்’. அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். இங்கு வந்து ஈசனை வணங்க, எல்லா நன்மைகளும் வளரும் என்பது நம்பிக்கை. பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரக் கோயில் இதுவாகும். எத்தனை சம்பாதித்தாலும் சேர்க்க முடியவில்லை என்று வருந்துபவர்கள், இங்கு வழிபட்டால் செலவுகள் குறைந்து சேமிக்கும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
டி20 போட்டிகளில் கோலி மெதுவாக விளையாடி வருவதாக எழுந்த விமர்சனங்களுக்கு தனது சிறப்பான பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் விராட், அரை சதம் அடிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொள்வதாகவும், ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் 47 பந்துகளில் 92 ரன்கள் அடித்து 195.74 ஸ்ட்ரைக் ரேட் பெற்று, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் (மே 10) மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர <
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப்க்கு செல்ல முடியாது. முதல் அணியாக மும்பை எலிமினேட் ஆன நிலையில், தற்போது பஞ்சாப் எலிமினேட் ஆகியுள்ளது. இன்று CSKக்கு எதிரான போட்டியில் தோற்கும் பட்சத்தில் குஜராத் அணியும் வெளியேறும்.
* 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
* இன்று (மே 10) அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது.
* இன்று முதல் சட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்
* ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* குரூப் 2 தேர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.
ஐபிஎல்லில் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் தோற்றால் GT அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதுவரை இரு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் CSK 6 வெற்றிகளுடன் 4ஆவது இடத்திலும், GT 4 வெற்றிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Sorry, no posts matched your criteria.